45 ஆண்டுகால கோரிக்கை கொங்கு நாடு மாநிலம்- மத்திய அரசுக்கு மனு அனுப்புவோம்: கொ.மு.க. பெஸ்ட் ராமசாமி
கோயம்புத்தூர்: கொங்கு நாடு தனி மாநிலம் என்பது 45 ஆண்டுகால கோரிக்கை. ஆகையால் கொங்கு நாடு தனி மாநிலம் அமைக்க கோரி மத்திய அரசுக்கு கோரிக்கை மனு அனுப்புவோம் என்று கொங்கு நாடு முன்னேற்ற கழகத்தின் மாநிலத் தலைவர் பெஸ்ட் ராமசாமி தெரிவித்துள்ளார்.
கொங்கு நாடு தனி மாநில கோரிக்கை குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலான தலைவர்கள் கொங்கு நாடு தனி மாநில கோரிக்கையை கடுமையாக எதிர்க்கின்றனர்.
இந்த நிலையில் கொங்கு நாடு தனி மாநில கோரிக்கையை நீண்டகாலமாக வலியுறுத்தி வரும் கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் மாநிலத் தலைவர் பெஸ்ட் ராமசாமி கோவையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கொங்கு- முன்னேற்றம் இல்லை
தமிழகத்தில் 12 மாவட்டங்கள் இருந்தன. இப்போது 38 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு 34 பேர் அமைச்சர்களாக இருக்கின்றனர். ஆனால் கொங்குநாடு பகுதியில் விகிதாச்சார அடிப்படையில் எதுவுமே முன்னேற்றம் இல்லை.

வரி வருவாயில் 66% கொங்கு
66% வரி வருவாய் கொங்குநாட்டின் 11 மாவட்டங்களில் இருந்துதான் தமிழக அரசுக்கு செல்கின்றது. இப்படி வரி வருவாயை பெற்றுக் கொண்டு பகுதிகளுக்கு எதுவும் செய்யவில்லை. நிர்வாக வசதிக்காக கொங்குநாடு பகுதியை தனி மாநிலமாக பிரித்தால் கூடுதல் வளர்ச்சி ஏற்படும்.

45 ஆண்டுகால கோரிக்கை
1976-ல் இருத்து கொங்கு நாடு தனி மாநில கோரிக்கைக்கான அமைப்பை நடத்தி வருகின்றோம். கொங்குநாடு என்ற பகுதி முன்னுக்கு வர வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம்.

ஜாதிய அடிப்படை அல்ல
கொங்குநாடு என்பது கவுண்டர் ஜாதிக்கு மட்டுமானது அல்ல. கொங்கு நாட்டில் வாழும் அனைவருக்குமானது. நாங்கள் கொங்கு நாடு தனிநாடு கேட்கவில்லை... தனி மாநிலம்தான் கேட்கின்றோம். கொங்கு நாடு தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அரசுக்கு மனு அனுப்புவோம். இவ்வாறு பெஸ்ட் ராமசாமி கூறினார்.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி!












Click it and Unblock the Notifications