Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவை எல் அண்டு டி சாலையில் 5 சுங்கச்சாவடிகள் 1-ந் தேதி முதல் மூடல்.. கலெக்டர் சொன்ன 2 குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை எல் அண்டு டி பைபாஸ் சாலை என்பது கோவை-அவினாசி ரோட்டில் உள்ள நீலாம்பூரில் தொடங்கி மதுக்கரை வரை 28 கி.மீ. தூரத்திற்கு செல்கிறது. இந்த சாலை பைப்பாஸ் சாலையாக உள்ள போது இருவழிச்சாலையாகவே உள்ளது. இங்கு மொத்தம் 6 சுங்கச்சாவடிகள் இருகின்றறன. இதில் ஐந்து சுங்கச்சாவடிகள் வருகிற 1-ந் தேதி முதல் மூடப்பட உள்ளதாக கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கோவை நகரம் வளரும் வேகத்திற்கு ஏற்ப அதன் உள்கட்டமைப்பு வசதிகள் மிகப்பெரிய அளவில் மேம்படுத்தப்பட வேண்டும் என்பது கோவை மக்களின் ஆசையாக உள்ளது. கோவையில் தற்போதையநிலையில் மக்கள் தொகை, புறநகரையும்சேர்த்தால் கிட்டத்தட்ட 35 லட்சம் என்கிற அளவில் இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் கோவையில் தினமும் வடமாநிலத்தவர்கள் வேலை தேடி வந்த வண்ணம் உள்ளனர்.

5 toll plazas on Coimbatore L amp amp T Road to be closed from august 1st 2 good news from the Collector

கோவை வளர்ச்சி

இதேபோல் தென் மாவட்டம், வடமாவட்டம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த பலரும் கோவைக்கு தான் அதிகமாக வேலை தேடி வருகிறார்கள். படித்தவர்கள், படிக்காதவர்கள் என யார் வந்தாலும் வேலை கொடுத்து, அவர்களுக்கு நல்ல வசதியும் செய்து கொடுத்து, அவர்களை வேலைக்கு அமர்த்தி வருகின்றன..இங்குள்ள தொழில் நிறுவனங்கள்.. தொழில் நிறுவனங்கள் கோவை மற்றும் புறநகரில் வளர்ந்த வண்ணம் உள்ளன. இதனால் கடந்த 20 வருடங்களில் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாகி விட்டது.


நீலாம்பூர் மதுக்கரை சாலை

இதன் காரணமாக கோவையை இணைக்கும் அனைத்து சாலைகளுமே நான்கு வழிச்சாலை மற்றும் ஆறுவழிச்சாலையாக மாறிவிட்டன. இதில் கோவை சேலம் தேசிய நெடுஞ்சாலை , ஆறுவழிச்சாலையாக மேம்பால வடிவில் கட்டப்பட்டது. விரைவில் திறக்கப்பட உள்ளது. இதேபோல் கோவை மாநகருக்குள் நுழையாமல் நீலாம்பூரில் இருந்து, புறநகர் பகுதியான மதுக்கரை செல்லும் வகையில் 26 கிலோ மீட்டர் தூரத்துக்கு உள்ள இருவழிச்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது. இந்த சாலையை எல்.அண்டு.டி. நிறுவனம் பராமரித்து வருகிறது. இது, தென்னிந்தியாவில் முதல் முறையாக தனியார் நிறுவனம் மூலம் அமைக்கப்பட்ட சாலை ஆகும்.

1999ம் ஆண்டு போடப்பட்டது

இந்த சாலை கடந்த 1999-ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருக்கிறது. இந்த சாலை வழியாக கேரளாவில் இருந்து தமிழகம், கர்நாடகா செல்லும் வாகனங்கள் கோவை மாநகருக்குள் வராமல் எளிதாக பெங்களூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட இடங்களுக்கு இன்று வரை சென்று வருகின்றன. அதேபோல் திருச்சி சாலையை இருகூர் சந்திப்பில் பிடித்து அப்படியே கோவைக்குள் வராமல் திருச்சி,மதுரை, போன்ற நகரங்களுக்கும் சென்று வந்தன. மிகவும் முக்கியமான பைப்பாஸ் சாலை என்ற போதிலும் இருவழிச்சாலையாகவே இருந்தது.

சாலை விரிவாக்கம்

இந்த சாலை குறுகியதாக இருப்பதால், அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. ராவத்தூர், வெங்கிட்டாபுரம், ஈச்சனாரி, போடிபாளையம், நாச்சிபாளையம், சிந்தாமணி புதூர் பிரிவுகளில் தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று வருவதால் சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை நீண்ட காலமாக இருந்தது. ஆனால் எல் அண்டு டி நிறுவனத்திற்கு 30 ஆண்டுகளுக்கு சுங்க வசூல் செய்யும் உரிமம் வழங்கப்பட்டு இருந்த காரணத்தால் 4 வழிச்சாலையாக மாற்றும் பணியில் தொய்வு இருந்து வந்தது.

மத்திய அரசு அதிரடி

இதையடுத்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் கடந்த 1-ந் தேதி இந்த சாலையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வசம் ஒப்படைத்தது. இதனால் இந்த சாலையை தரம் உயர்த்தி விரிவுப்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. இதன்படி இந்த சாலையில் நீலாம்பூர் முதல் மதுக்கரை வரை உள்ள 6 சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நேரடி கட்டுப்பாட்டில் சுங்க கட்டணத்தை வசூலித்து மத்திய அரசின் வங்கி கணக்கில் செலுத்தி வருகின்றன.

மூடப்படும் ஐந்து சுங்கச்சாவடிகள்

இந்த நிலையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் அறிவிப்பின்படி மதுக்கரை சுங்கச்சாவடியில் புதிய கட்டண வசூல் வருகிற 1-ந் தேதி முதல் வசூலிக்கப்பட இருக்கிறது. அதை தவிர்த்து எல் அண்டு டி பைபாஸ் சாலையில் உள்ள 5 சுங்கச்சாவடிகள் வருகிற 1-ந் தேதி முதல் மூடப்பட உள்ளன.

கட்டண சலுகை

அதன்படி நீலாம்பூர் சுங்கச்சாவடி, சிந்தாமணிபுதூர் அருகே உள்ள 2 சுங்கச்சாவடி, கற்பகம் பல்கலைக்கழகம் அருகே சாலையின் இருபுறமும் உள்ள சுங்கச்சாவடிகள் என மொத்தம் 5 சுங்கச்சாவடிகள் மூடப்பட உள்ளன. மதுக்கரை சுங்கச்சாவடியில் மட்டும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும். இதில் கோவை பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு கட்டணத்தில் சலுகை வழங்கப்படும் என கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் அறிவித்துள்ளார். எல் அண்டு டி சாலையில் 5 சுங்கச்சாவடிகள் மூடப்படுவதால் கோவை வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+