காத்திருப்புக்குப் பிறகு மழை பெய்தும் விவசாயிகள் சோகம்.. பல்லாயிரக்கான வாழை மரங்கள் முறிஞ்சு போச்சே!
கோவை: வாட்டி வதைத்த கோடை வெயிலுக்கு மத்தியில் லேசாக குளிர வைத்தது மழை. ஆனால் மழையோடு வீசிய சூறாவளிக் காற்றால் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து விழுந்துள்ளது விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயில் கொளுத்தி வருகிறது. வெயில் கொடுமையில் எந்த ஏரியாவும் தப்பவில்லை. நீலகிரி மாவட்டத்தில் வழக்கத்துக்கு மாறாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், நேற்று கோவை, நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. உதகையில் நேற்று மதியம் சுமார் ஒரு மணி நேரம் இடி, மின்னலுடன் கன மழை பெய்தது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளில் நேற்று மாலை 4 மணி அளவில் மழை பெய்தது. மழை பெய்யும் முன் கடுமையாக வீசிய சூறாவளி காற்றால், சிறுமுகை லிங்காபுரம், காந்தவயல் ஆகிய பகுதிகளில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதம் அடைந்தன.
வாழை மரங்கள் அறுவடைக்கு இன்னும் சில வாரங்களே இருந்த நிலையில் கடுமையான சூறாவளிக் காற்றில் சிக்கி, வாழை மரங்கள் தாரோடு முறிந்து வீணானது விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தாளவாடி மலை பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமானது. இதனால், வாழை பயிரிட்ட விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கடன் வாங்கி வாழை பயிர் செய்த நிலையில் பல லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளதால், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications