70 வயது கோவை பெண்மணியை காணவில்லை! நீங்க பார்த்தீங்களா?
கோவை: கோவை மாவட்டம், சின்னத்தடாகம் பகுதியைச் சேர்ந்த 70 வயது பெண்மணியை கடந்த 8 நாட்களாக காணவில்லை. இவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கோவை மாவட்டம், சின்னத்தடாகம் பகுதியைச் சேர்ந்தவர் தெய்வானை. வயது 70. இவருடைய கணவர் கணேசன் 2010 ஆம் ஆண்டில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் உயிரிழந்தார். இவருக்கு ரமேஷ் (38) என்ற மகனும், ரம்யா (34) என்ற ஒரு மகளும் உள்ளனர்.

தெய்வானை சின்னத்தடாகம் பகுதியில் உள்ள தனது மகன் வீட்டிலும், கோவில்மேட்டில் உள்ள மகள் வீட்டிலும் மாறி மாறி இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த மே 6 ஆம் தேதி காலை 8.30 மணியளவில் சின்னத்தடாகத்தில் உள்ள மகன் வீட்டில் இருந்து வெளியே சென்றவரை கடந்த 8 நாட்களாக காணவில்லை. காணாமல் போன அன்று பிங்க் நிற புடவை அணிந்திருந்தார். உயரம் 5 அடி. மாநிறம்.
இதுதொடர்பாக சின்னத்தடாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர்.
இவரைப் பற்றிய விவரம் அறிந்தால் 98948-13373, 96555-99969 என்ற எண்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கவும்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications