மனுஷங்களா நீங்க.. கோவை யானையின் வயிற்றில் தோண்ட, தோண்ட பிளாஸ்டிக்! குட்டியுடன் உயிரிழந்த சோகம்..!
கோவை: கோவை மருதமலை வனப்பகுதியில் உடல்நலம் குன்றிய காட்டு யானைக்கு ஹைட்ரோ தெரபி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி யானை பரிதாபமாக உயிரிழந்தது. பிரேதப் பரிசோதனையில், உயிரிழந்த யானையின் வயிற்றில் 15 மாத ஆண் யானைக் குட்டி முழு வளர்ச்சி அடைந்த நிலையில் இருப்பதும், கிலோ கணக்கிலான பிளாஸ்டிக் குப்பைகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
கோவை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த யானைகள் அவ்வப்போது உணவு, குடிநீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கும், தோட்டங்களுக்கும் வருவது வாடிக்கையாக உள்ளது. சமீபகாலமாக இவ்வாறு ஊருக்குள் வரும் யானைகள் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களை உண்பதும் வழக்கமாகி விட்டது.

கோவை மருதமலை அடிவாரத்தில் பெண் காட்டு யானை ஒன்று உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித் திரிந்தது. இதையடுத்து, வனத் துறையினர் மே 17 ஆம் தேதி முதல் யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். அப்போது உடனிருந்த குட்டி யானை அவ்வப்போது தாய் யானையை எழுப்ப முயற்சித்துக் கொண்டிருந்தது. தொடர்ந்து தாய் யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், குட்டி யானை வனப் பகுதிக்குள் சென்றுவிட்டது.
மருத்துவக் குழுவினர், வனத் துறையினர் கடந்த நான்கு நாட்களாக அங்கேயே முகாமிட்டு தாய் யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். யானையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் முதல் முறையாக பாதிக்கப்பட்ட யானைக்கு நேற்று ஹைட்ரோ தெரபி மூலம் சிகிச்சை அளிக்க வனத்துறை மருத்துவ குழுவினர் முடிவு செய்தனர்.
ஐந்து கால்நடை மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். பாதிக்கப்பட்ட யானைக்கு காது நரம்பு மூலம் மருந்துகள் மற்றும் குளுக்கோஸ் அளிக்கப்பட்டது. ஹைட்ரோ தெரபி சிகிச்சை அளிக்கும் வகையில், வனப் பகுதியில் தற்காலிக குட்டை அமைக்கப்பட்டு அதில் 18 ஆயிரம் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்பட்டது. பின்னர், பொக்லைன் மூலமாக யானையை தண்ணீருக்குள் இறக்கி சிகிச்சை அளிக்கப்பட்டது.
கடந்த நான்கு நாட்களாக சுமார் 100 பாட்டில் குளுக்கோஸ் யானைக்கு ஏற்றப்பட்டு மருத்துக் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்தனர். யானையின் உடலிலும் தண்ணீர் அடிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று அந்த காட்டு யானை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, வனத் துறையினர் கூறுகையில், காட்டு யானைக்கு நரம்பு வலி சிகிச்சை மூலமாகவும் ஊசி மூலமாகவும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவரின் அறிவுரைப்படி பசுந்தீவனம் பழங்கள் கலி மற்றும் தண்ணீர் ஆகியவை கொடுக்கப்பட்டன. யானை சிறிதளவு பழங்களை மட்டும் எடுத்துக் கொண்டது.
ஹைட்ரோதரபி கொடுக்கப்பட்ட சிறிது நேரத்தில் யானை மாலை 3:45 மணி அளவில் இறந்துவிட்டது. யானை இறந்ததற்கான காரணம் ஹார்ட் அட்டாக்காக இருக்கலாம், ஆனாலும் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே முழுமையான காரணம் தெரியவரும் என்று கோவை மாவட்ட வனத் துறையினர் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், உயிரிழந்த பெண் யானைக்கு இன்று பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், யானையின் வயிற்றில் 15 மாதங்கள் நிரம்பிய நன்கு வளர்ச்சியடைந்த ஆண் யானை உயிரிழந்த நிலையில் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும், கிலோ கணக்கிலான பிளாஸ்டிக் குப்பைகள் யானையின் வயிற்றில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் வனம் மற்றும் விலங்குகள் ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications