கோவையில் கன்று குட்டிக்கு தாயாக மாறிய நாய்.. பால் கொடுத்து பாசம் காட்டி வளர்க்கும் அதிசயம்
கோவை: கோவை செல்வபுரம் அருகே புட்டுவிக்கி சாலையில் உள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடம் உள்ளது. இங்கு பக்தர்கள் நேர்த்தி கடனாக மாடுகளை தானம் வழங்குவது வழக்கம். அங்கு இருந்த ஒரு பசு மாடு கன்று குட்டி ஈண்ட நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு காலமானது. தாயை இழந்தத கன்றுக் குட்டிக்கு நாய் ஒன்று பால் கொடுத்து வருகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள் நெகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள்.
கோயம்புத்தூரில் உள்ள சுண்டக்காமுத்தூர், மஞ்ச கிணறு திட்டு, சேத்துமாவாய்க்கால், பைபாஸ் சாலைக்கு அருகில் சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடம் அமைந்துள்ளது. வெள்ளியங்கிரி மலையிலிருந்து வந்த ஒரு சித்தரின் அருளால் இந்த சுயம்பு லிங்கம் தோன்றியதாக கூறப்படுகிறது. இங்கு சித்தர்களுக்கான வழிபாடுகள் மற்றும் பயிற்சிகள் நடைபெறுகின்றன. இங்கு ஏற்றப்படும் மோட்ச தீபம், குடும்பத்தில் நிலவும் குழப்பங்களை நீக்கி, அமைதியைத் தருவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

இங்கு பக்தர்கள் நேர்த்தி கடனாக மாடுகளை தானம் வழங்குவது வழக்கம் ஆகும். அங்கு இருந்த ஒரு பசு மாடு கன்று குட்டி ஈண்ட நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு உயிரிழந்து உள்ளது. தாய் இல்லாமல் பரிதவித்து அதன் கன்றுக் குட்டியை பரிதவித்து வந்து உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குட்டிகளை ஈன்ற நாய் ஒன்று அந்தக் கன்று குட்டி கட்டி வைத்து இருக்கும் இடத்திற்கு அடிக்கடி வந்து சென்று உள்ளது. இதனைக் கண்டு அங்கு இருந்தவர்கள் இன்று தற்செயலாக பார்க்கும் பொழுது கட்டி வைத்து இருந்த கன்று குட்டி அருகே சென்று நின்று கொண்டது, இதனை அடுத்து அந்த கன்று குட்டி அதனிடம் பால் குடித்து உள்ளது. இதனைக் கண்டு ஆச்சரியப்பட்ட அவர்கள் செல்போனில் வீடியோ பதிவு செய்து உள்ளனர்.
தாயை இழந்த கன்று குட்டிக்கு பால் கொடுக்கும் தாய் உள்ளம் கொண்ட நாயின் செய்தி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் இடையே பகிரப்பட்டு தாயுள்ளம் கொண்ட நாய் கன்றுக் குட்டிக்கு பால் கொடுக்கும் காட்சிகளை காண அப்பகுதி மக்கள் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. பொதுவாக நாய்கள் நன்றியுடவை என்று கூறுவார்கள்.
அதேநேரம் பெண் நாய்கள் தாய்மையின் உள்ளுணர்வுடன் இருக்கும். அது ஒரு கன்றுக்குட்டியைத் தனது குட்டியாக நினைத்துக்கொண்டு பால் கொடுக்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்.. சில சமயங்களில் நாய் தனது குட்டிகளை இழந்திருக்கலாம் அல்லது கன்றுக்குட்டிக்கு ஒரு தாயின் அரவணைப்பு தேவைப்படலாம். அப்படியான சூழலை உணரும் நாய் கன்றுக்குட்டிக்கு பால் கொடுக்கும். அதேநேரம் நாய் மற்றும் கன்றுக்குட்டி ஒரே இடத்தில், ஒன்றாக வளர்ந்திருக்கும் போது, இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளது.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications