கோவையில் நடுஇரவில் பிடிப்பட்ட பெரிய கண்டெய்னர் லாரி.. மர்மம் விலகாத மூட்டைகள்.. யாருடைய லாரி?
கோவையில் நேற்று சிறைபிடிக்கப்பட்ட கண்டெய்னர் லாரியில் என்ன இருக்கிறது என்பது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.
Recommended Video

கோயம்புத்தூர்: கோவையில் நேற்று சிறைபிடிக்கப்பட்ட கண்டெய்னர் லாரியில் என்ன இருக்கிறது என்பது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு நாடு முழுக்க தீவிர பரிசோதனைகள் நடந்து வருகிறது. தேர்தலுக்காக அதிகாரிகள் வேகமாக பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று கோவையில் கண்டெய்னர் லாரி ஒன்று சிறைபிடிக்கப்பட்டது. இந்த லாரியில் என்ன இருக்கிறது என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

எங்கு இருக்கிறது
கோவையில் உட்கடம் ஆத்து பாலம் அருகே நேற்று இரவு வேகமாக கண்டெய்னர் லாரி ஒன்று சென்றது. இந்த கண்டெய்னர் லாரி தறிகெட்ட வேகத்தில் நகர்ந்து சென்றது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் சந்தேகம் அடைந்து தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர்.

நிறுத்தினார்கள்
அதன்பின் அதிகாரிகள் வருவதற்குள் கண்டெய்னர் லாரியை அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தினார்கள். அதோடு லாரி டிரைவரை சிறைபிடித்து விசாரணை செய்தனர். இந்த நிலையில் அங்கு வந்த அதிகாரிகள் லாரியை சிறைபிடித்து, பின் டிரைவரை அங்கிருந்து அழைத்து சென்றனர்.

டீ தூள்
நேற்று இரவே லாரியில் அதிகாரிகள் முதற்கட்டமாக சோதனை நடத்தினார்கள். முதற்கட்ட சோதனையில் லாரியில் டீ தூள் இருந்தது தெரிய வந்தது. மூட்டை மூட்டையாக இதனுள் டீ தூள் இருந்தது. ஆனால் மீதம் இருந்த மூட்டைகளில் என்ன இருந்தது என்று கண்டுபிடிக்கப்படவில்லை.

சோதனை
இதனால் இன்று மீண்டும் அந்த லாரியில் சோதனை நடத்தினார்கள். தற்போதும் அந்த மூட்டைகளில் சோதனை நடந்து வருகிறது. ஆனால் அந்த மீதம் இருந்த மூட்டைகளில் என்ன இருந்தது என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. இதுகுறித்த கடுமையான விசாரணை நடக்கிறது.

கொச்சி செல்கிறது
அதே சமயம் இது ஜெர்மனுக்கு செல்லும் டீ தூள் என்று அதன் உரிமையாளர்கள் கூறியுள்ளனர். ஜெர்மன் நாட்டிற்கு கொச்சியில் இருந்து ஏற்றுமதி செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட பொருட்கள் இது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் என்ன
இந்த கண்டெய்னர் லாரியை இப்போது அனுப்பும் எண்ணத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இல்லை என்று கூறியுள்ளனர். எல்லா மூட்டைகளையும் திறந்து பார்த்த பின்பே இதை விடுவிப்போம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து விசாரிக்க தனிப்படை கோவை சென்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications