கோவையில் 40 லட்சம் தங்கம்.. மூளைச்சலவை செய்த மனைவி. ஒரே நாளில் உடைந்த 9 ஆண்டு விஸ்வாசம்
கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டில் உள்ள நகைப்பட்டறையில் 9 ஆண்டுகளாக வேலை செய்து சந்தோஷமாக வாழ்ந்து வந்த நகை தொழிலாளியை மூளைச்சலவை செய்த மனைவியால், கடைசியில் சிறையில் குடும்பத்தோடு கம்பி எண்ணுகிறார். ரூ.40 லட்சம் தங்கம் திருடியதால் சிக்கி உள்ளார்கள்.
நகைப்பட்டறையில் வேலை செய்து வந்தவர் தனது மனைவியின் பேச்சை கேட்டு தவறான வழியில் செயல்பட்டதால் இன்று அவருடன் சேர்ந்து சிறையில் இருக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்..

கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டில் பழனிகுமார் என்பவர் நகை பட்டறை நடத்தி வருகிறார். இந்த பட்டறையில் கடந்த 9 ஆண்டுகளாக நகை செய்யும் தொழிலாளியாக மதுரை மேலூர் பகுதியை சேர்ந்த 45 வயதாகும் பாண்டியராஜன் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி உமா மகேஸ்வரி. இவருக்கு 27 வயது ஆகிறது.
பாண்டியராஜன்-உமா மகேஸ்வரி தம்பதி கோவை வடமதுரை வி.எஸ்.கே. நகரில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர். 9 ஆண்டுகளாக நம்பிக்கையுடன் பாண்டியராஜன் வேலை செய்து வந்ததால், நகை பட்டறையை இவரை நம்பிவிட்டுவிட்டு, உரிமையாளர் பழனிகுமார் அடிக்கடி வெளியே செல்வது வழக்கம்.
இந்த நிலையில் பட்டறையில் உள்ள நகையை திருடி வருமாறும், இருவரும் வெளியூர் சென்று அதனை விற்று ஜாலியாக இருக்கலாம் என்றும் தொழிலாளி பாண்டியராஜனிடம் அவருடைய மனைவி உமா மகேஸ்வரி கூறினாராம். இதனிடையே மனைவியின் மூளைச்சலவையால் சலனம் அடைந்த பாண்டியராஜன், கடந்த பிப்ரவரி மாதம் 17-ந்தேதி பட்டறையில் யாரும் இல்லாத போது, 800 கிராம் எடையுள்ள தங்க நகைகள் மற்றும் தங்க கட்டிகளை எடுத்துள்ளார். பின்னர் மனைவியை அழைத்துக்கொண்டு பாண்டியராஜன் வெளியூருக்கு எஸ்கேப் ஆகியிருக்கிறார்.
இதனிடையே கடைக்கு வந்து பார்த்த பழனிகுமார், நகைகளை திருடியது பாண்டியராஜன் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.. அவரை தொடர்பு கொண்ட போது செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்தது. இதையடுத்து தனது கொள்ளை சம்பவம் குறித்து கோவை ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார். சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் திருடப்பட்டிருந்த நிலையில், ஆர்.எஸ்.புரம் இன்ஸ்பெக்டர் மேனகா வழக்குப்பதிவு செய்து பாண்டியராஜன் உமா மகேஸ்வரி தம்பதியை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.
இதனிடையே தப்பியோடிய பாண்டியராஜன் உமா மகேஸ்வரி தம்பதி தஞ்சாவூர் அருகே ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக கோவை தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில், அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் பாண்டியராஜனையும், அவருடைய மனைவி உமாமகேஸ்வரியையும் கைது செய்து, அவரிடம் இருந்த 800 கிராம் தங்கத்தை மீட்டார்கள். இதன் மதிப்பு ரூ.40 லட்சம் இருக்கும். கைதான 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications