திமுகவில் மாற்று கட்சியினர் இணையும் விழா.. குவிந்த தொண்டர்கள் கூட்டம்.. இந்த போட்டோவை பாருங்க!
கோவை: கோவையில் பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் காலை தொடங்கி வைத்த நிலையில், தற்போது திமுகவில் ஏராளமானோர் இணைந்து வருகின்றனர்.
இன்று காலை, ரூ.663 கோடி மதிப்பிலான 768 புதிய திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என எந்த பேதமும் இல்லாமல், அனைத்து தொகுதிகளிலும் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாக முதலமைச்சர் இந்த நிகழ்வில் பெருமிதம் கூறியிருந்தார்.

இன்று காலை கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். ரூ.663 கோடி மதிப்பளவில் 748 புது திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அவர், ரூ.271.25 கோடி மதிப்பளவில் 228 முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் 1,07,062 பயனாளிகளுக்கு ரூ.588 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்கியுள்ளார். கோவை மாவட்ட வரலாற்றிலேயே இத்தனை பேருக்கு ஒரே நேரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது இதுவே முதன் முறை என சொல்லப்படுகிறது.

தற்போது இம்மாவட்டத்தில் ரூ.93.66 கோடி மதிப்பீட்டில் 98.42 கி.மீ நீளத்திற்கு 335 சாலைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ரூ.60.01 கோடி மதிப்பீட்டில் 62 ஏக்கர் பரப்பளவில் வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் பையோமைனிங் திட்டப் பணிகள், ரூ.49 கோடியில் சங்கனூர் பள்ளம் 11.49 கிமீ நீளத்திற்கு மேம்பாட்டுப் பணிகள், ரூ.16.41 கோடி மதிப்பீட்டில் 63 எண்ணிக்கையிலான நகர் நல மையங்கள் மற்றும் 3 எண்ணிக்கையிலான மருத்துவ ஆய்வுக் கூடங்கள் கட்டும் பணிகள் என நடைபெற்று வருகின்றன.

மட்டுமல்லாது, ரூ.20 கோடியில் கோவை நகராட்சி பகுதிகளில் புதிய தெருவிளக்குகள் அமைக்கும் பணி, ரூ.16 கோடி மதிப்பில் 63 நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் மற்றும் 3 மருத்து ஆய்வுக்கூடங்கள் கட்டும் பணிகள், ரூ.11 கோடியில் கோவை நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துதல் ஆகிய திட்டப்பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருவதாக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் முக்கிய திட்டமாக பார்க்கப்படுவது கோவை விமான நிலைய விரிவாக்க திட்டம்தான்.

உலகளவிலான தொழில் நகரமாக கோவை வளர்ச்சி பெறும் வகையில் கோயமுத்தூர் பன்னாட்டு விமான நிலைய விரிவாக்க திட்டத்திற்கு ரூ.1,810 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கப்பட்டு நடைபெற்று வரும் பணிகள் ஒருபுறம் எனில், நிறைவுபெற்ற பணிகளும் அதேபோல நீண்டுள்ளது. அதன்படி, வரலாற்று சிறப்பு மிக்க விக்டோரியா ஹால் ரூ.91 லட்சம் செலவில் நவீன முறையில் மாநகராட்சி மன்றத்திற்கான கலந்தாய்வுக் கூட்ட அறை சீரமைக்கும் பணிகள் நிறைவுற்றுள்ளன.
இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக தற்போது திமுகவில் மாற்றுக்கட்சியினர் ஏராளமானோர் இணைந்து வருகின்றனர். கொங்கு மண்டலம் பொதுவாக பாஜக, அஇஅதிமுக கட்சிகளின் கோட்டையாக இருந்த நிலையில், கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் திருச்சியில் திமுக நடத்திய பொதுக்கூட்டத்தில் வரலாறு காணாத அளவில் கூட்டம் குவிந்ததைப் போல தற்போது கொங்கு மண்டலத்திலும் கூட்டம் குவிந்து வருகிறது. இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் பல முக்கிய முக்கிய புள்ளிகளும் இதில் பங்கேற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications