கோவை லாட்ஜில் காதல் ஜோடி.. வாடகை வாங்க போன மேனேஜர்.. பதறிய படி போலீசுக்கு போன்!
கோவை: கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள லாட்ஜில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த சம்பவத்தில் இளம்பெண் பலியான நிலையில் வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாகை மாவட்டம் வடபதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரது மனைவி கிருத்திகா (வயது 26). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கிருத்திகாவும் மணிகண்டனும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
கிருத்திகா கடந்த 2 ஆண்டுகளாக தனது கணவர் மணிகண்டனை பிரிந்து பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணன் (29) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

கண்டிப்பு
கிருத்திகாவும் கிருஷ்ணனும் அடிக்கடி செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் நெருங்கி பழகி வந்தனர். இந்த கள்ளக்காதல் விவகாரம் கிருத்திகாவின் பெற்றோருக்கு தெரிய வந்திருக்கிறது. அவர்கள் கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது மகளை கடுமையாக கண்டித்தனர். இது குறித்து அவரது கள்ளக்காதலன் கிருஷ்ணனுக்கு கூறியிருக்கிறார்.

மகிழ்ச்சி
இதனையடுத்து 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறுவது என முடிவு செய்தனர். அதன்படி 2 பேரும் கடந்த 5 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி கோவைக்கு வந்திருக்கிறார்கள். பின்னர் 2 பேரும் கணவன்-மனைவி என கூறி சின்னியம்பாளையத்தில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி உள்ளனர். அங்கு வைத்து 2 பேரும் மகிழ்ச்சியாக இருந்தனர்.

பதறிய மேனேஜர்
பின்னர் கள்ளக்காதல் ஜோடி , தங்களை உறவினர்கள் சேர்ந்து வாழ விடமாட்டார்கள் என்று எண்ணி உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தனர். அதன்படி 2 பேரும் குளிர்பானத்தில் விஷத்தை கலந்து குடித்திருக்கிறார்கள். சிறிது நேரத்தில் இருவரும் மயங்கி விழுந்தனர். இதனிடையே லாட்ஜில் தங்கியிருந்த இவர்கள் வாடகை கொடுக்காமல் இருந்திருக்கிறார்கள்.

சிகிச்சை
இதனால் லாட்ஜின் பொறுப்பாளர் அறைக்கு நேரடியாக சென்றுள்ளாராம்.அப்போது அறையில் தங்கி இருந்த ஜோடி விஷம் குடித்து மயக்க நிலையில் இருந்தனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் 2 பேரையும் மீட்டு ஆம்புலன்சில் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். அங்கு 2 பேரையும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

போலீஸ் வழக்கு
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் கிருத்திகா இறந்தார். கிருஷ்ணன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கோவை பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள லாட்ஜில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று அதில் பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications