Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவையில் 1,800 கோடியில் பிரம்மாண்டமாக வரும் ஆறுவழிச்சாலை..  நீலாம்பூர்- மதுக்கரை ரூட் அடியோடு மாறுது

Subscribe to Oneindia Tamil

கோவை: கேரளாவின் நுழைவு வாயிலாக இருக்கும் கோவை மாநகரம் தான் தென்னிந்தியாவின் மான்செஸ்டர்.. இந்தியாவில் மிகமிக வேகமாக வளரும் நகரங்களில் கோயம்புத்தூர் முதன்மையானது. இங்கு பல ஆயிரம் சிறு குறு நிறுவனங்கள் உள்ளன. மிகப்பெரிய தொழிற்சாலைகளும் பல உள்ளன. ஐடி நிறுவனங்களும் அதிகமாகி வருகின்றன. எனவே போக்குவரத்து நெரிசல் அதிகமாகிவிட்டது. எனவே போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண நீலாம்பூர்- மதுக்கரை பைபாஸ், ஆறு வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. இதற்காக ரூ.1,800 கோடியில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது.

கோவை மாநகரம் கடந்த 20 வருடங்களில் மின்னல் வேகத்தில் வளர்ந்துள்ளது. குறிப்பாக கடந்த 10 வருடங்களிலும், கொரோனாவிற்கு பிறகும், வளர்ச்சி அபாரமாக மாறி உள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக மற்ற நகரங்கள் நெருங்க முடியாத வேகத்தில் கோவை மாநகரம் வளர்ந்து வருகிறது. கோவை மாநகரின் மக்கள் தொகை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. கோவை மாநகருக்குள் தான் ஒரு காலத்தில் அத்தனை தொழிற்சாலைகளும் இருந்தன. இப்போது பல தொழிற்சாலைகள் நகருக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டுவிட்டன. அந்த அளவிற்கு குடியிருப்புகள் அதிகரித்துவிட்டன. மக்கள் அடர்த்தியும் மிக அதிகமாகி வருகிறது.

A massive six-lane highway is coming up in Coimbatore at a cost of Rs 1 800 crore

கோவையை பொறுத்தவரை பல நகர மக்கள் இணையும் இடமாக இருக்கிறது. கேரளாவின் நுழைவு வாயில், ஊட்டி -மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, பொள்ளாச்சி சாலை, திருச்சி சாலை, தொண்டாமுத்தூர் சாலை என ஒரு நகரத்திற்குள் நுழைய பல வழிகள் உள்ளன. இதில் கேரளாவுக்கு செல்லும் சேலம்- கொச்சி பைபாஸ் சாலையில் வாகன போக்குவரத்து மிக மிக அதிகமாக உள்ளது. இந்த சாலையில் வாகன நெருக்கத்தை கவனித்தே கடந்த 2000ம் ஆண்டே கோவையை அடுத்த நீலாம்பூர் முதல் மதுக்கரை வரை பல ஆண்டுகளாக நான்கு வழிச்சாலை பயன்பாட்டில் உள்ளது.

ஆனால் இந்த சாலையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சந்திப்பு ரோடுகள் குறுக்கிடுகின்றன. இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான லாரிகள் செல்கின்றன. எனவே கார் உள்ளிட்ட மற்ற வாகனங்கள் வேகமாக செல்ல முடியாத நிலை உள்ளது. சுமார் 26 கிலோமீட்டர் தூரத்தை கடக்க வாகன ஓட்டிகள் போராடும் நிலை இருக்கிறது. வாகன ஓட்டிகள் மணிக்கணக்கில் போராடித்தான் மதுக்கரை செல்கிறார்கள். பலர் தற்போது மேம்பாலம் போட்டிருப்பதால் அதில் ஏறி நகருக்குள்ளேயே செல்லவும் தொடங்கிவிட்டார்கள். இதனால் நகரிலும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

எனவே தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சேலம்- கொச்சி நெடுஞ்சாலை அகலப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தார்கள். இந்த திட்டத்தை செயல்படுத்த திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும். பல்வேறு கட்ட ஆய்வுக்கு பின்னர் தேசிய நெடுஞ்சாலை பிரிவு கள ஆய்வு செய்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் அறிக்கை வழங்கியிருக்கிறது.

கோவையில் சேலம்- கொச்சி பைபாஸ் சாலையை ரூ.1,800 கோடி செலவில் 26 கிலோமீட்டர் தூரத்துக்கு ஆறு வழிச்சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்ட அறிக்கை தயார் செய்திருக்கிறது. இது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட உயர் அதிகாரிகள் இதுபற்றி கூறும் போது, கோவையில் சேலம்- கொச்சி பைபாஸ் சாலையில் நீலாம்பூர்- மதுக்கரை வரை 6 வழிச்சாலையாக மாற்ற 49 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் நியமிக்கப்பட்டிருக்கிறார். 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக டெண்டர் அறிவிக்க உள்ளோம்.

ஆறுவழிச்சாலையை பொறுத்தவரை 10.5 மீட்டரில் இருந்து 45 மீட்டர் வரை சாலையை எதிர்காலம் கருதி அகலப்படுத்த உள்ளோம். இந்த சாலையின் குறுக்கே உள்ள கீழ்மட்ட இருகூர் ரயில்வே பாலம் மற்றும் செட்டிபாளையம் ரயில்வே பாலம் ஆகியவை அகலப்படுத்தப்படும். அதேபோல் சிந்தாமணிபுதூர் சந்திப்பு, பொள்ளாச்சி ரோடு சந்திப்பு ஆகிய 2 இடங்களில் மேம்பாலம் கட்டப்படும். இது போல் இந்த சாலையில் 13 இடங்களில் கீழ்மட்ட சுரங்கப்பாதை பாலம் அமைக்கப்படும். மேலும் கட்டணம் ரத்து செய்யப்பட்ட 5 சுங்கச்சாவடிகள் அகற்றப்படுகிறது. இதனால் எந்த குறுக்கீடும் இன்றி வாகனங்கள் விரைவாக பயணிக்கலாம்" என்று கூறினார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+