கோவை உக்கடத்தில் வருகிறது புதிய அடையாளம்.. பிரம்மாண்ட திட்டத்தை கையில் எடுத்த மாநகராட்சி
கோவை: கோவை உக்கடத்தை பொறுத்தவரை புறநகர் பேருந்து நிறுத்தம் மற்றும் பொள்ளாச்சி, கேரளா வட்டாரங்களில் வரும் பேருந்துகள் வந்து செல்லும் இடமாக இருக்கிறது. ஏராளமான பேருந்துகள் வந்து செல்கின்றன. கேரளா மற்றும் பொள்ளாச்சி வழித்தடத்தில் செல்லும் உக்கடத்தை கடந்தே செல்கிறார்கள். இதனால் கோவை உக்கடத்தில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே ஒரு பஸ் நிலையம் உள்ளது. தற்போது புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த இரண்டு பஸ்நிலையங்களை இணைக்கும் வகையில் ரூ.6.25 கோடியில் நடைமேம்பாலம் அமைக்க கோவை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
கோவையில் உள்ள உக்கடம் பேருந்து நிலையம் கோவை மாநகரின் மிக முக்கியமான போக்குவரத்து முனையம்மாக இருக்கிறது. இங்கிருந்துதான் பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி போன்ற பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது கோவையின் 'தெற்கு வாசல்' என்று அழைக்கப்படுகிறது. கேரள மாநிலத்தின் பாலக்காடு மற்றும் திருச்சூர் பகுதிகளுக்குச் செல்லும் கேரள அரசுப் பேருந்துகளும் , தமிழகப் பேருந்துகளும் இங்கிருந்து அதிகளவில் இயக்கப்படுகின்றன.

உக்கடத்தை பொறுத்தவரை பேருந்துகள் வந்து செல்லும் இடமாக மட்டுமின்றி, மாநகரின் முக்கியமான வணிக பகுதியாக இருக்கிறது. மிகப்பெரிய மீன் மார்க்கெட், காய்கறி சந்தை, ஜவுளி நிறுவனங்கள், நகைக்கடைகள் என எல்லாமே உக்கடம் முதல் டவுன்ஹால் வரை பரவி கிடக்கின்றன. கோவையின் வணிக மையமாக உக்கடம் இருக்கிறது. இதனால் எப்போதுமே நெரிசல் அதிகமாக இருக்கும்
இதனால்தான் உக்கடத்தில் மேம்பாலம் அமைக்கப்பட்டது. அது ஓரளவு நெரிசலை கட்டுப்படுத்துகிறது. இந்நிலையில் ரூ.21.55 கோடி மதிப்பீட்டில் உக்கடத்தில் இரட்டை பஸ் முனைய திட்டத்தை கோவை மாநகராட்சி நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது. புதிய பஸ் நிலையம் விரைவில் திறக்கப்பட உள்ளது. அதிக போக்குவரத்து காரணமாக உக்கடத்தில் சாலையை கடப்பது சிரமமாக இருக்கிறது.. 2 பஸ்நிலையங்களும் செயல்பாட்டுக்கு வரும்போது சாலையை கடப்பதில் மேலும் சிரமம் ஏற்படும் என தெரிகிறது.
ஏனெனில் உக்கடத்தில் புதிய பேருந்து நிலையம் செயல்படும்போது மேலும் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். இதனால் வயதான பயணிகள் மற்றும் குழந்தைகள் கடக்க மிகவும் சிரமப்படுவார்கள். எனவே அந்த பகுதியில் நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
உக்கடம் பகுதியில் தொடர்ந்து வாகனங்கள் செல்கின்றனமேலும் சாலையோரங்களில் தாறுமாறாக வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கிறார்கள். எனவே உக்கடம் 2 பஸ் நிலையங்களையும் இணைக்கும் வகையில் சுரங்கப்பாதையோ அல்லது நடைமேம்பாலமோ உடனடியாக அமைக்க வேண்டியது அவசியம் என்கிற நிலை உருவானது.
இதையடுத்து உக்கடத்தில் 2 பஸ் நிலையங்களையும் இணைக்கும் வகையில் உக்கடம் சந்திப்பில் ஒரு நடைமேம்பாலம் கட்ட விரிவான திட்ட அறிக்கை கோவை மாநகராட்சியால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.6 கோடியே 31 லட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு ஒப்புதல் மற்றும் நிதியுதவிக்காக திட்டவரைவு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும், பணிகள் தொடங்கும் என கோவை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications