கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தூய்மை பணியாளர்களுக்கு விருந்து! எல்லோருக்கும் பிரியாணி பரிமாறிவிட்டு ரசம் ஊற்றி சாப்பிட்ட ஆ.ராசா!

Google Oneindia Tamil News

கோவை: நீலகிரி மக்களவை தொகுதிக்குட்பட்ட கூடலூர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுடன் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார் ஆ.ராசா. எம்.பி.

எல்லோருக்கும் பிரியாணி, முட்டை,கேசரி என பரிமாறப்பட்ட நிலையில் தனக்கு பிரியாணி வேண்டாம் எனக் கூறிவிட்டு ரசம் ஊற்றி சைவம் மட்டுமே சாப்பிட்டார் ஆ.ராசா.

கடந்த சில மாதங்களாகவே அவர் கடுமையான டயட் முறையை பின்பற்றி வருவது உடற்பயிற்சியில் அக்கறை செலுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் இரட்டை இலையில் அதிமுக வெல்லும்..கூட்டணி வியூகம்..ஜி.கே.வாசன் நம்பிக்கை ஈரோடு கிழக்கு தொகுதியில் இரட்டை இலையில் அதிமுக வெல்லும்..கூட்டணி வியூகம்..ஜி.கே.வாசன் நம்பிக்கை

நாடாளுமன்றத் தேர்தல்

நாடாளுமன்றத் தேர்தல்

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் தனது நீலகிரி தொகுதியை தீவிரமாக வலம் வந்துகொண்டிருக்கிறார் ஆ.ராசா. கோவை, திருப்பூர், நீலகிரி என மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகள் நீலகிரி மக்களவை தொகுதிக்குள் வருவதால் வாரம் ஒரு மாவட்டத்திற்கு இப்போது விசிட் அடிக்க ஆரம்பித்துள்ளார். வரும் 2024 நாடளுமன்றத் தேர்தலில் தன்னை எதிர்த்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுவார் என எதிர்பார்ப்பதால் தொகுதி மீது கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் ஆ.ராசா.

மதிய சாப்பாடு

மதிய சாப்பாடு

இதனிடைய கோவை வடக்கு மாவட்டம் கூடலூர் நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு பிரியாணி விருந்து வைத்த ஆ.ராசா, அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார். ஆனால் தனக்கு பிரியாணி வேண்டாம் எனக் கூறிய அவர் சைவ உணவான ஒயிட் ரைசும், ரசமும் மட்டும் சாப்பிட்டார். கடந்த சில மாதங்களாகவே பிரியாணி போன்ற ஹெவி அசைவ உணவுகளை ஆ.ராசா தவிர்த்து வருகிறாராம். இதற்கு காரணம் தனது உடல்நலன் மீது கொண்ட அக்கறையும் கவனமுமே எனக் கூறப்படுகிறது.

தொகுதிப்பணி

தொகுதிப்பணி

இதேபோல் நீலகிரி மக்களவைத் தொகுதி மக்களின் நீண்ட கால பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படுத்தும் பொருட்டு தொடர்ந்து மனுக்களை பெற்று அதன் மீது தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். குறிப்பாக அன்னூர் பகுதியில் தொழில் பூங்காவுக்காக பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் அரசு சார்பில் கையகப்படுத்தப்படுவதை தமது தீவிர முயற்சியின் காரணமாக தடுத்து நிறுத்தினார். தொழில்துறை தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூட ஆ,ராசா விடுத்த கோரிக்கை காரணமாக எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

பாஜக தீவிரம்

பாஜக தீவிரம்

நீலகிரி தொகுதியை மீண்டும் தக்க வைக்க ஆ.ராசா இவ்வாறு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் சூழலில், பாஜகவும் தனது பங்குக்கு அங்கு தீவிரக் களப்பணிகளை தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
A.Raja had lunch together with sanitation workers working in Gudalur Municipality under Nilgiris Lok Sabha constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X