சாலை விபத்தில் சிக்கிய இளைஞர்! பதறிப்போய் ஓடிச்சென்று உதவிய ஆ.ராசா! காரில் ஹாஸ்பிடல் அனுப்பி வைப்பு!

Subscribe to Oneindia Tamil

கோவை: திமுக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ஆ.ராசா, சாலை விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்டு ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்காமல் உடனடியாக காரில் மருத்துவமனை அனுப்பி வைத்தார்.

கோவை மாவட்டம் நீலாம்பூர் பகுதியில் நேற்று மாலை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார் ஆ.ராசா. அப்போது அவிநாசி சாலையில் பைக் ரைடிங் செய்த இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கி உதவிக்கு போராடிக் கொண்டிருந்தார். அந்த வழியாக சென்ற ஆ.ராசா, அந்த இளைஞரை பார்த்ததும் பதறிப்போய் காரை நிறுத்தி இறங்கிச் சென்று மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

A.Raja rescued the young man who was involved in a road accident and immediately sent him to the hospital by car

இதனிடையே இதில் குறிப்பிட வேண்டியது என்னவென்றால் ஆம்புலன்ஸ்க்கு தகவல் சொல்லி அது வரும் வரை காத்திருந்து நேரத்தை வீணடிக்க விரும்பாமல் தன்னுடன் வந்த கட்சிக்காரரின் இன்னோவா காரில் அடிபட்ட இளைஞரை ஏற்றி ஹாஸ்பிடல் அழைத்துச் செல்ல அறிவுறுத்தினார்.

மேலும், ஆ.ராசாவுடன் பயணித்த திமுக மருத்துவரணி நிர்வாகி கோகுல், அந்த இளைஞருடன் மருத்துவமனை வரை சென்றார். அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற ஆ.ராசா, அடிபட்ட இளைஞரின் ஹெல்த் அப்டேட் பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.

A.Raja rescued the young man who was involved in a road accident and immediately sent him to the hospital by car

சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைத்திட, விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்திற்குள் கட்டணமில்லா உயிர் காக்கும் அவசர சிகிச்சை வழங்கும் இன்னுயிர் காப்போம்; நம்மை காக்கும் 48 திட்டத்தை அண்மையில் தான் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்திருந்தார்.

சாலை விபத்துகளில் காயமடைந்தவர்களுக்கு விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரம் மிக முக்கியம் என்பதைக் கருத்தில் கொண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+