கோவை மாநகராட்சிப் பகுதியில் வசிக்கிறீங்களா?.. அப்போ கண்டிப்பா இதை நோட் பண்ணுங்க.. சூப்பர் அறிவிப்பு
கோவை: கோவையில் சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகளை செலுத்தும் வகையில், சிறப்பு முகாம் இன்று நவம்பர் 9 மற்றும் 10 (சனி, ஞாயிறு) ஆகிய நாட்களில் நடைபெற உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சி சார்பில் சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்கள் அவ்வப்போது சிறப்பு முகாம் அமைத்து வசூலிக்கப்படுகின்றன. இதில், சொத்து வரி ஆறு மாதத்துக்கு ஒருமுறையும், குடிநீர் கட்டணம் இரு மாதத்துக்கு ஒருமுறையும் வசூலிக்கப்படுகிறது.

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடப்பு 2024-25 ஆம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையிலான கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி மற்றும் குடிநீர் கட்டணம் முதலிய அனைத்து வரியினங்களை பொதுமக்கள் செலுத்துவதற்கு ஏதுவாக சிறப்பு வரிவசூல் முகாம் அனைத்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் (அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக) வரிவசூல் பணி நடைபெறும்.
மேலும், அனைத்து மண்டல வரிவசூல் மையங்கள் மற்றும் சிறப்பு வரிவசூல் முகாம்கள் நவம்பர் 9, 10 ஆம் தேதி காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை செயல்படும். சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடைபெறும் இடங்கள்: 7, 8 வார்டுகளுக்கு நேரு நகர் பேருந்து நிறுத்தம் அருகில், காளப்பட்டியிலும், வார்டு 40க்கு Mobile Camp, வீரகேரளம் (நவம்பர் 9, சனிக்கிழமை மட்டும்), வார்டு 74க்கு Vyoma Appartment, தொண்டாமுத்தூர் ரோடு, பூசாரிபாளையம் (நவம்பர் 10, ஞாயிற்றுக்கிழமை மட்டும்) முகாம் நடைபெறுகிறது.
வார்டு எண் 10 க்கு சென்ட்ரல் பார்க் அப்பார்ட்மெண்ட், சக்தி ரோடு, சரவணம்பட்டியிலும், வார்டு எண் 85க்கு கோயம்புத்தூர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, குறிச்சியிலும், வார்டு எண் 87க்கு காசாகிராண்டு அப்பார்ட்மெண்ட் (Casagrand Apprtment) குனியமுத்தூரிலும், வார்டு எண் 88க்கு தர்மராஜா கோவில் மண்டபம், குனியமுத்தூரிலும், வார்டு எண் 94க்கு மாரியம்மன் கோவில் வீதி, மாச்சம்பாளையத்திலும் நடைபெறுகிறது.
வார்டு எண் 32க்கு சிறுவர் பூங்கா, நாராயணசாமி வீதி, சங்கனூரிலும், வார்டு எண் 63க்கு பெருமாள் கோவில் வீதி. கோயம்புத்தூர் மாநகராட்சி, நியூ கலெக்ஷன் சென்டரிலும், வார்டு எண் 80க்கு ஓக்கிலியர் காலனி ஸ்கூல், கெம்பட்டி காலனியிலும் நடைபெறவுள்ளது.
மேலும், சனி, ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 9, 10) இரண்டு நாட்களிலும் மாநகராட்சியின் அனைத்து வரிவசூல் மையங்கள் மற்றும் மேற்கண்ட சிறப்பு வரிவசூல் முகாம்களும் வழக்கம் போல் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை செயல்படும். எனவே, பொதுமக்கள் இவ்வசதியைப் பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்துமாறு மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications