கோவையில் கோப்ரா.. கிரிக்கெட்டை விட நல்லா நடிக்கிறாருப்பா! இர்பான் பதானை புகழ்ந்து தள்ளிய ’சீயான்’
கோவை : முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கிரிக்கெட்டை விட கோப்ரா படத்தில் நடிப்பில் மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார் என நடிகர் விக்ரம் வெகுவாக புகழ்ந்து பேசினார்.
2018ஆம் ஆண்டு வெளியான இமைக்கா நொடிகள் மூலம் தமிழ் திரை உலகில் இயக்குனராக அறிமுகமான அஜய் ஞானமுத்து தற்போது சீயான் விக்ரம் நடிப்பில் கோப்ரா திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.
ஆக்சன் திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படம் நடிகர் விக்ரமின் 58 வது திரைப்படமாகும். இந்த படத்தில் நடிகர் விக்ரமுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், மிருனாளினி ரவி, மியா ஜார்ஜ் உள்ளிட்ட ஏராளமானூர் நடித்துள்ளனர்.

கோப்ரா
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் கோப்ரா பட புரமோசனுக்காக படக்குழு தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் கோப்ரா திரைப்படத்தின் விளம்பரத்திற்காக நடிகர் விக்ரம், நடிகைகள் ஸ்ரீநிதி, மிர்னாலினி மற்றும் மீனாட்சி ஆகியோர் கோவையில் உள்ள தனியார் கல்லூரிக்கு வந்திருந்தனர்.

நடிகர் விக்ரம்
கல்லூரி மாணவர்களிடையே உரையாற்றிய அவர்கள் மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனர். இதனையடுத்து கோவை கொடிசியா அருகே உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய விக்ரம்," இந்த படத்தில் அடிப்படை அருமையாக செதுக்கப்பட்டுள்ளது. மாறுபட்ட கதை.

பல்வேறு சவால்
கதாப்பாத்திரம் சொல்லும் போது அதற்கேற்ப மாறுவது தனக்கு பிடிக்கும். கோப்ரா திரைப்படம் பல்வேறு சவால்களை கடந்து சிரமப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுக்கு பின் திரையரங்கில் படம் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இயக்குனர் அஜய்க்கு நன்றி. கடைசி வரை திரைப்படத்தில் நடித்து கொண்டே இருப்பேன்

இர்பான் பதான்
திருச்சி விமான நிலையத்தில் எனது ரசிகர்கள் மீது போலிசார் தாக்குதல் நடத்தியது வருத்தம் அளிக்கிறது . சமீபமாக வரும் படங்கள் அதிக அளவில் ஹிட் ஆகிறது மகிழ்ச்சி அளிக்கிறது. முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கிரிக்கெட்டை விட சினிமாவில் அவர் சிறப்பாக செயல் ஆற்றி உள்ளார்" என பேசினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications