'இதை' செய்யுங்கள் போதும்.. மக்களவையில் 40.. சட்டசபையில் 200 கன்பார்ம்! எஸ்.பி.வேலுமணி பரபர பிளான்
கோவை: அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.
அதிமுக இப்போது இரு வேறு பிரிவுகளாக இயங்கி வருகிறது. ஓபிஎஸ் தலைமையில் ஒரு பிரிவினரும் எடப்பாடி தலைமையில் மற்றொரு பிரிவினரும் தொடர்ந்து இயங்கி வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்டிலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதில் பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி பின்னணியில் தான் உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிமுக
மறுபுறம் கட்சி ரீதியாகவும் எடப்பாடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதிமுகவின் பொன் விழா நிறைவு விழா மற்றும் 51-வது ஆண்டு துவக்க விழாவை மாநிலம் முழுக்க பிரம்மாண்டமாக நடந்த எடப்பாடி அணியினர் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாகக் கோவையில் பல்வேறு கூட்டங்களை நடத்தத் திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காகக் கோவை தெற்கு, வடக்கு, மாநகர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

எஸ்.பி.வேலுமணி
கோவை மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அம்மன் அர்ஜூனன், சூலூர் கந்தசாமி, செல்வராஜ் என எனப் பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கோவை அதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். இதில் அதிமுக பொன் விழா நிறைவு நாளையொட்டி நடத்தப்பட வேண்டிய கூட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

நிறைவு விழா
இந்த கூட்டத்தில் பேசிய எஸ்பி வேலுமணி, "அதிமுக தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதில் 31 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இருந்து உள்ளது. அப்போது அதிமுக தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி உள்ளது. பொன்விழா நிறைவு நாளில் கோவை முழுக்க அதிமுக கொடிகள் பறக்க வேண்டும். இருப்பினும், மாநகர பகுதிகளில் போலீசார் திமுக கொடிக்கு அனுமதி அளிக்கும் போதிலும், அதிமுக கொடிக்கு அனுமதி அளிப்பதில்லை.

கோபம்
ஒவ்வொரு மாவட்டத்திலும் நடக்கும் பொதுக்கூட்டங்கள் மாநாடு போலப் பிரம்மாண்டமாக நடத்த வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை நாம் செய்ய வேண்டும். இப்போது ஆட்சியில் இருக்கும் திமுகவினர் மீது பொதுமக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இதனால் நாம் நடத்தும் மாநாடுகளில் பொதுமக்களே கண்டிப்பாகத் திரளாகக் கலந்து கொள்வார்கள்.. திமுக மிரட்டலைப் பார்த்து அஞ்சாமல் அதிமுக ஐடி விங் செயல்பட்டு வருகிறது.

திட்டம் இல்லை
அதிமுகவுக்கும் கோவைக்கும் பல செண்டிமெண்ட்கள் உள்ளது.. எம்ஜிஆர் அகில இந்திய அண்ண திராவிட முன்னேற்றக் கழகம் என்று கட்சியின் பெயரை அறிவித்ததே கோவையில் தான். ஜெயலலிதா மறைந்தாலும் கூட அவர் கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள் மூலம் ஒவ்வொரு குடும்பத்திலும் அவர் தொடர்ந்தே வாழ்ந்தே வருகிறார். அதேநேரம் திமுகவினர் எந்தவொரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை..

கோவை
நீட்டை சொல்லியே இன்னும் ஏமாற்றி வருகிறார்கள். விளம்பர முதலமைச்சராக ஸ்டாலின் இருந்து வருகிறார். போலீசார் மற்றும் அதிகாரிகள் கூட திமுக கட்சிக்காரர்களைப் போலத் தான் செயல்படுகிறார்கள். கோவை இந்தளவுக்கு மோசமாக எப்போதும் இருந்தது இல்லை. அனைத்து பகுதிகளிலும் சாலைகள் மிக மோசமாக உள்ளது. திமுகவினரிடம் கோரிக்கை வைக்கவும் கூட பொதுமக்கள் அச்சப்படும் நிலை தான் உள்ளது.

இதைச் செய்யுங்கள் போதும்
தமிழகத்தில் லஞ்சம் ஊழலும் அதிகரித்துவிட்டது. பொதுமக்கள் திமுக அரசு மீது கோபத்தில் உள்ளனர். அனைத்து மக்களும் திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துவிட்டார்கள். திமுக எதிர்ப்பு வாக்குகள் அப்படியே அதிமுகவுக்கு வர நிர்வாகிகள் உழைக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களிலும் வெல்வோம். சட்டசபைத் தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நிச்சயம் வெல்வோம்.

இந்தி விவகாரம்
நாடாளுமன்றத்தில் திமுக எம்பிகள் மக்கள் பிரச்சினை குறித்து எதுவும் பேசுவதில்லை. நாங்கள் எம்பியாக இருந்த போது காவிரி பிரச்சினையில் 23 நாட்கள் அவையையே முற்றிலுமாய் முடக்கினோம். இந்தி விவகாரத்தைப் பொறுத்தவரைத் தமிழகம் இந்தியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. அதிமுகவும் அதில் உறுதியாக உள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications