மலைவாழ் மக்களுக்கு ஆதரவு கரம் நீட்டிய அதிமுக பெண் நிர்வாகி... முழுவீச்சில் நிவாரண உதவிகள்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாவட்டம் அட்டுக்கல் என்ற மலைகிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு அதிமுக பெண் நிர்வாகியும், தொழிலதிபருமான சோனாலி பிரதீப் நிவாரண உதவிகள் வழங்கினார்.

அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகளை அவர் விநியோகம் செய்தார்.

மேலும், கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கை கழுவுவதன் அவசியம் மற்றும் சமூக விலகலை பின்பற்ற வேண்டியதன் முக்கியம் குறித்து மலைவாழ் மக்களுக்கு எடுத்துரைத்தார்.

அனைத்துக் கட்சிகள்

அனைத்துக் கட்சிகள்

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் மே மாதம் 3-ம் தேதி வரை நாடு தழுவிய அளவில் லாக்டவுன் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் வருமானமின்றி குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் அதிமுகவை சேர்ந்த பெண் நிர்வாகியும், தொழிலதிபருமான சோனாலி பிரதீப் கோவை மாவட்டத்தில் பல கிராமங்களுக்கு நேரடியாக சென்று நிவாரண உதவிகள் வழங்குகிறார்.

ஒரு வார தேவைக்கு

ஒரு வார தேவைக்கு

மேலும், கவுண்டம்பாளையம், தொண்டாமுத்தூர் பகுதிகளில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்களை தந்துதவுகிறார். இதுமட்டுமின்றி அவர்களின் சேவையை போற்றும் வகையில் நன்றி தெரிவித்ததுடன் முககவசம், சானிடைஸர் உள்ளிட்ட பொருட்களையும் சோனாலி பிரதிப் கொடுத்து உதவுகிறார்.

விளக்கம்

விளக்கம்

கடந்த வாரம் அட்டுக்கல் மலைவாழ் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கச்சென்ற அவர், கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூய்மையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். மேலும், மருத்துவம் உள்ளிட்ட எந்த உதவிகள் தேவைப்பட்டாலும் தனது அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கிராமமக்களுக்கு நம்பிக்கை அளித்தார்.

நாள்தோறும்

நாள்தோறும்

இதனிடையே கவுண்டம்பாளையத்தில் உள்ள சோனாலி பிரதீப் இல்லத்திற்கு நாள்தோறும் நிவாரண பொருட்கள் பெறுவதற்காக நலிந்த குடும்பத்தை சேர்ந்த ஏராளமானோர் வருகை தருகின்றனர். அவ்வாறு வருபவர்களை சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் இடைவெளி விடுத்து நிறுத்தி தேவையான பொருளுதவியை செய்கிறார் சோனாலி பிரதீப்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+