கருணாநிதியிடம் ராஜதந்திரம் கற்றவன்.. 25 நாட்களில் ஆட்சியை மாற்றிக் காட்டுகிறேன்.. துரைமுருகன் சூளுரை
கோவை: 25 நாட்களுக்குள் ஆட்சியை மாற்றிக் காட்டும் பொறுப்பை தானே ஏற்பதாக திமுக பொருளாளர் துரைமுருகன் சூலூர் பிரச்சாரத்தில் சூளுரைத்துள்ளார்.
மக்களவை தேர்தலுடன் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் கடந்த 18ம் தேதி நடந்து முடிந்து விட்டது. தற்போது சூலூர், அரவக்குறிச்சி உள்பட 4 தொகுதிகளுக்கு வரும் மே19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை அறிமுகப்படுத்தும் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி அளவில் சூலூரில் நடந்தது.

அதிமுக திட்டம்
அப்போது வேட்பாளரை அறிமுகம் செய்து திமுக பொருளாளர் துரைமுருகன் பேசுகையில், "குறைந்தது 5 அல்லது 6 தொகுதிகளில் வெற்றி பெற்றால் தான் இந்த ஆட்சி நிலைக்கும் எனவே யார் யாரெல்லாம் இந்த ஆட்சிக்கு எதிராக இருப்பார்கள் என்பதை அறிந்து அவர்களை தகுதிநீக்கம் செய்யும் காரியத்தில் இந்த ஆட்சியில் இருப்பவர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

2 இடங்கள் கிடைக்கும்
நடந்து முடிந்த 18 சட்டமன்ற தொததி இடைத்தேர்தல்களில் வந்தால் ஒன்று அல்லது இரண்டு தான் வரும். மற்றது வராது என்று அவர்கள் கணக்கு போட்டு இருக்கிறார்கள். மிச்சத்தை எப்படி பிடிப்பது, இப்போது நடக்கின்ற 4 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று துணிந்து இறக்கி இருக்கிறார்கள்.

பணம் இறைப்பு
பணத்தை வாரி இறைப்பது, ஒரு ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் ரூ 10 ஆயிரம் தருவது எப்படியும் ஜெயித்துக்காட்டுவது என்ற நிலையை எடுத்து, கோடிக்கணக்கான பணங்களை கொண்டுவந்து இறக்கி இருக்கிறார்கள். ஆகவே மக்கள் மீது நம்பிக்கையை இழந்து தற்போது பணத்தின் மீது நம்பிக்கையை கொண்டு வந்துள்ளனர்.

விலைபோகக்கூடாது
எனவே கோவை மக்களை பொறுத்த வரையில் அரசியல் அறிந்தவர்கள், நாட்டு நடப்பு பரிந்தவர்கள், தெளிவானவர்கள், எனவே பணத்துக்கு மோசம் போகமாட்டார்கள் என்று நான் கருதுகிறேன்.

ஆட்சி மாற்றம்
ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதிகளிலும் திமுக 100 சதவீதம் வெல்லும். சூலூரை ஜெயித்து கொடுங்கள், 25 நாட்களுக்குள் இந்த ஆட்சியை மாற்றிக் காட்டும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

50 ஆண்டுகள் ஸ்டாலின்
கருணாநிதியிடம் இருந்து ராஜதந்திரத்தை ஓரளவு கற்றுள்ளேன்; அடுத்த 50 ஆண்டு காலத்திற்கு ஸ்டாலின் கையில் தான் தமிழகம் இருக்கும்" இவ்வாறு கூறினார்.
-
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்












Click it and Unblock the Notifications