வாய்க்காலில் மிதந்த தம்பதி.. 3 மகள்கள் இருந்தும் கவனிக்காத கொடுமை.. மனமுடைந்து தற்கொலை!
கோவை மாவட்டம் பாப்பம்பட்டி சித்தநாயக்கன்பாளையம் சேர்ந்த தம்பதி காளிமுத்து - சுப்பாத்தாள். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.
3 பேருக்குமே காளிமுத்து கல்யாணம் செய்து வைத்துவிட்டார்.. அவரவர்கள் மாமியார் வீட்டில் வசித்து வருகிறார்கள்.. கொஞ்ச நாளாகவே காளிமுத்து, சுப்பாத்தாள் இருவருக்குமே உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டது.

அவர்களை கவனித்து கொள்ள வீட்டில் யாருமே இல்லை.. தங்களால் எதுவும் செய்து கொள்ள முடியாத அளவுக்கு வயோதிகம் வாட்டியது.. இதனால் இரண்டு பேருமே அளவுக்கு மிஞ்சிய மனவருத்தத்தில் இருந்தனர். வெளியூர்களில் வசித்து வரும், 3 மகள்களும் ஏதாவது விசேஷம் என்றால் மட்டும் பெற்றோர் வீட்டுக்கு வந்து போயுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் தம்பதி இருவரும், அக்கம்பக்கத்தினர், ஆஸ்பத்திரிக்கு செல்வதாக சொல்லிவிட்டு கிளம்பினர். ஆனால், அன்று முழுவதும் 2 பேருமே வீடு திரும்பவில்லை.. இதனால் குழப்பமும், சந்தேகமும் அடைந்த அக்கம்பக்கத்தினர் 3 மகள்களுக்கும் தகவல் தந்தனர்.
விஷயத்தை கேள்விப்பட்டு மகள்கள் அப்பா-அம்மாவை தேடி ஓடிவந்தனர்... இந்த சமயத்தில், காளிமுத்துவும், சுப்பாத்தாளும் பல்லடத்தை அடுத்த குள்ளம் பாளையம் பிஏபி வாய்க்காலில் சடலமாக கிடப்பதாக காமநாயக்கன் பாளையத்துக்கு தகவல் போனது.
இதையடுத்து விரைந்து வந்த போலீசார், வாய்க்காலில் சடலமாக கிடந்த காளிமுத்து, சுப்பத்தாள் உடல்களை மீட்டு, போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டுக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை தொடங்கினர். உடல்நலம் குன்றி அவதிப்பட்டு வந்த இந்த தம்பதியை 3 மகள்களுமே கவனிக்காமல் விட்டதால், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்டமாக தெரியவந்துள்ளது. தொடர் விசாரணை நடக்கிறது.












Click it and Unblock the Notifications