ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.. கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் வரப்போகும் அதிரடி மாற்றம்
கோவை: கோவை மாவட்டம் தொழில்துறை, கல்வி, மருத்துவம், ஐடி உள்ளிட்ட பல துறைகளில் கோவை முன்னேறி கொண்டிருக்கிறது. போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதததால் போக்குவரத்து நெரிசல் மிகப்பெரிய பிரச்சனையாக மாறி வருகிறது. இதற்காக பல்வேறு பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன. அவிநாசி சாலையில் தமிழ்நாட்டின் நீளமான ஜி.டி நாயுடு மேம்பாலம் சமீபத்தில் திறக்கப்பட்டது. இந்நிலையில் அந்த மேம்பாலத்தில் ஏ.ஐ கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து கோவை வேகமாக முன்னேறி கொண்டிருக்கிறது. அதற்கேற்ப கோவையின் உள்கட்டமைப்பு வசதியும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக கோவை மாநகரின் மக்கள் தொகை மட்டுமே 30 லட்சத்தை கடந்துள்ளது. தினசரி மற்ற மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கோவைக்கு ஏராளமான மக்கள் வருகிறார்கள்.

ஜிடி நாயுடு மேம்பாலம்
இதன் காரணமாக மாநகர சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக உள்ளது. இதை சரி செய்வதற்காக முக்கிய பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன. அந்த வகையில் கோவை மாநகரில் ஏற்கனவே உக்கடம் மேம்பாலம், அவிநாசி சாலை மேம்பாலம், காந்திபுரம் மேம்பாலம், கணபதி டெக்ஸ்டூல் பாலம். வடகோவை மேம்பாலம் உள்ளிட்டவை உள்ளன. சாய்பாபா காலனி பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
அவிநாசி சாலையில் 10.10 கிமீ தொலைவுக்கு மேம்பாலம் கட்டப்பட்டது. தமிழ்நாட்டின் நீளமான மேம்பாலம் இது தான். இந்த மேம்பாலத்திற்கு தமிழ்நாடு அரசு ஜி.டி. நாயுடு பெயர் சூட்டியது. கடந்த நவம்பர் மாதம் முதல் இந்த மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. அவிநாசி சாலை கோவையின் இதய பகுதியில் உள்ளது. மாவட்டத்தின் முக்கிய கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்கள் அங்கு உள்ளன.
ஏஐ கேமராக்கள்
இந்த மேம்பாலம் மக்களுக்கு நன்கு பயனளித்தாலும், 10.10 கிமீ தொலைவில் இருப்பதால் வாகனங்களை அதிவேகமாக இயக்கி விபத்து ஏற்படுத்துதல், வாகனங்களில் சாகசம் செய்தல் போன்ற சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இதை சரி செய்வதற்காக ஜிடி நாயுடு மேம்பாலத்தில் ஏஐ கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு கூறியிருந்தனர்.
இதற்கான பணிகளை மாநில நெடுஞ்சாலைத்துறை தற்போது தொடங்கியுள்ளது. மொத்தமுள்ள 10 கிமீ தொலைவில் 45 ஏஐ கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன. இதற்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறுதல், விபத்து, அதிவேகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கண்காணிப்பதற்கு ஏஐ கேமராக்கள் பயன்படும் என அதிகாரிகள் கூறுகிறார்கள்.
நேரடியாக அபராதம்
கேமராக்களுடன் மேம்பாலத்தில் 18 எல்இடி திரைகளும் வைக்கப்படவுள்ளன. விதிமீறலில் ஈடுபடும் வாகனங்கள் குறித்து அந்த திரையில் ஒளிபரப்பப்படும். இந்த கேமராக்கள் காவல்துறை மற்றும் ஆர்டிஓ ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஹெல்மட், சீட் பெல்ட் அணியாதது, அதிவேகமாக செல்லுதல், ட்ரிபுள்ஸ், அதிக சுமைகளை ஏற்றி செல்லுதல் உள்ளிட்ட விதிமீறல்களுக்கு அபராதம் விதித்து நேரடியாக செலான் அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளை இந்த மாத இறுதிக்குள் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் ஜிடி மேம்பாலத்தில் போக்குவரத்து விதிமீறல் மற்றும் விபத்துகள் குறையும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications