'அம்மா' 'அம்மா' என நிர்மலா சீதாராமனை மேடையில் அழைத்தது ஏன்? அதிமுக பொள்ளாச்சி ஜெயராமன் விளக்கம்!
கோவை: பாஜக மூத்த தலைவரும் மத்திய நிதி அமைச்சருமான நிர்மலா சீதாராமனுடன் கோவையில் இன்று ஒரே மேடையில் அதிமுக எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பேசுகையில் 'அம்மா' 'அம்மா' என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அழைத்தது ஏன் என்பது தொடர்பாக செய்தியாளர்களுக்கு விளக்கம் தந்துள்ளார் அதிமுக எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று டெல்லியில் இருந்து கோவை வருகை தந்தார். கோவை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பிரமாண்ட வரவேற்பளிக்கப்பட்டது. பாஜக நிர்வாகிகள் பூக்கள் தூவி நிர்மலா சீதாராமனை வரவேற்றார்.

பாஜக மத்திய அமைச்சருடன் அதிமுக எம்.எல்.ஏ மேடையில் பங்கேற்பு: இன்று கோவையில் தூய்மை இந்தியா பணிகளில் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். பின்னர் கோவையில் கடன் வழங்கும் விழாவிலும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். இந்த நிகழ்வில் அதிமுக எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமனும் பங்கேற்றார். அதிமுக- பாஜக கூட்டணி முறிந்த நிலையில் மத்திய அமைச்சர் நிகழ்ச்சியில் அதிமுக எம்.எல்.ஏ. பங்கேற்பது இதுதான் முதல் முறை.
'அம்மா' 'அம்மா' என அழைத்த பொள்ளாச்சி ஜெயராமன்: இந்நிகழ்ச்சியில் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை குறிப்பிடும் போது எல்லாம் 'அம்மா', 'அம்மா' என அழைத்தார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பேசும் போது பாஜகவினர் சொல்வதைப் போல "பாரத தேசத்தின்' அமைச்சர் எனவும் பொள்ளாச்சி ஜெயராமன் குறிப்பிட்டார். மேலும் தென்னை விவசாயிகளின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளையும் இந்த மேடையில் பொள்ளாச்சி ஜெயராமன் முன்வைத்தார்.

நிர்மலா சீதாராமனை 'அம்மா' என கூப்பிட்டது ஏன்?: இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் பொள்ளாச்சி ஜெயராமன். அப்போது மேடையில் பேசும் போது 'அம்மா' 'அம்மா' என நிர்மலா சீதாராமனை குறிப்பிட்டீர்களே என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பொள்ளாச்சி ஜெயராமன் பதிலளிக்கையில், எங்களுக்கு அம்மான்னா ஒரே அம்மாதான். புரட்சித் தலைவி அம்மாதான். ஒரு மத்திய நிதி அமைச்சரை வேற எப்படி சொல்லி கூப்பிடுவீங்க? மத்திய நிதி அமைச்சரை ஒரு மரியாதை நிமித்தமா பேசுறோம். அம்மா என்பது எங்கள் தெய்வம். புரட்சித் தலைவி அம்மா. இவர் நிதி அமைச்சராக இருப்பதால் அவ்வாறு குறிப்பிட்டுச் சொன்னோம் என்றார்.

ஜெயலலிதாவுடன் ஒப்பீடா?: இதனைத் தொடர்ந்து 'ஜெயலலிதாவோடு நிர்மலா சீதாராமனை ஒப்பிடுகிறீர்களா'? என செய்தியாளர் மீண்டும் கேள்வி எழுப்ப, புரட்சித் தலைவியோடு யாரையும் ஒப்பிட முடியாது. அவர் ஒரு அல்ட்டிமேட் லீடர். மாபெரும் தலைவர். இவங்க மத்திய நிதி அமைச்சர். அவரை சந்தித்து விவசாயிகளின் கோரிக்கையை சொல்வதற்காக வந்தோம் என திட்டவட்டமாக நகர்ந்தார் பொள்ளாச்சி ஜெயராமன்.
-
சிவி சண்முகத்துக்கு அடுத்த அடி. 5 அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடிக்கு ஆதரவு.. யார் இவர்கள்? லிஸ்ட் -
மந்தையில் இருந்து பிரிந்த 3 ஆடுகள்..நொறுங்கிய அதிமுக! இனி விஜய்க்குதான் நல்ல காலம்! எப்படி தெரியுமா? -
சென்னையில் கால் வைத்த செங்கோட்டையன்.. அடுத்து நொடி எடப்பாடிக்கு அதிர்ச்சி.. 3 அதிமுக MLAகள் ராஜினாமா -
தூய சக்தி என்றால் 3 எம்.எல்.ஏக்களையும் கட்சியை விட்டு நீக்கணும்.. விஜய்க்கு அன்புமணி வைத்த வேண்டுகோள் -
இன்பதுரை எடுத்த சுப்ரீம் ஆயுதம்? சபாநாயகர் போட்ட 5 நிமிட உத்தரவு! சுப்ரீம் கோர்ட்டில் சிக்கும் தவெக? -
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு, அமைச்சர்களை சந்தித்து தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா! -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் இசக்கி சுப்பையா.. கைப்பட கடிதம் கேட்ட சபாநாயகர் -
எக்ஸ்பிரஸ் வேகம்.. 100% குதிரை பேரம்.. தவெகவில் இணைந்த 3 அதிமுக எம்எல்ஏக்கள்.. இன்பதுரை போட்ட பதிவு -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
குடிசைகள் இல்லாத நகரமாக மாறும் மும்பை.. 2030 தான் டார்கெட்! ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு












Click it and Unblock the Notifications