கோவையில் பரவும் துப்பாக்கி கலாசாரம்? துப்பாக்கியுடன் சுற்றிய இருவர் கைது.. அச்சத்தில் கோவை மக்கள்
கோவை: கோவையில் உள்ள தனியார் விடுதியில் ஏர்பிஸ்டல் துப்பாக்கிகள், பட்டா கத்தி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
கோவை நகர்ப் பகுதியில் துப்பாக்கிகளுடன் மர்ம நபர்கள் சுற்றுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து கோவை இரத்தினபுரி போலீசார் காந்திபுரம் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது தனியார் விடுதி ஒன்றில் இரண்டு பேர் போலியான முகவரி கொடுத்துத் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

போலீஸ் விசாரணையில் ஒருவர் பெயர் சாகுல்ஹமீது, மற்றும் மற்றொருவர் பெயர் சக்தி என்பதும் தெரியவந்தது. நண்பர்களான இருவரும் அந்த விடுதியில் தனித்தனியாக இரண்டு அறைகளை எடுத்துத் தங்கியுள்ளனர்.
போலீசார் கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததைத் தொடர்ந்து , அவர்கள் இருந்த அறைகளில் போலீசார் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் அங்கு இரண்டு ஏர்பிஸ்டல் துப்பாக்கிகள், பத்து சிலிண்டர்கள், ஒரு பட்டா கத்தி மற்றும் புல்லட் ஒரு பாக்கெட் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றைப் பறிமுதல் செய்த இரத்தினபுரி போலீசார் தங்கும் விடுதி காந்திபுரம் காட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால் அந்த காவல் நிலையத்தில் சாகுல் ஹமீது, சக்தியை ஒப்படைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களையும் காட்டூர் போலீசாரிடம் கொடுத்தனர்.
இதையடுத்து காட்டூர் போலீசார் இருவரிடமும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் கடந்த சில மாதங்களாகக் கொள்ளை,வழிப்பறி, திருட்டு போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், துப்பாக்கி கலாச்சாரமும் அதிகரித்து வருகிறதோ என்று கோவை மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications