பல சிறந்த கல்லூரிகள் தமிழ்நாட்டில் இருந்தாலும்.. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேச்சால் ஆடிப்போன திமுக
கோவை: தேசிய அளவிலான தரவரிசையில் பல சிறந்த கல்லூரிகள் தமிழ்நாட்டில் இருந்தாலும், வேலைவாய்ப்புகள் பெறும் வகையில் அவை பட்டதாரிகளை உருவாக்கவில்லை.. இதற்கு முக்கிய காரணம் கல்லூரிகளில் மாணவர்கள் பெறும் கல்வித்திறனுக்கும் வேலைவாய்ப்புக்கான தேவைப்படும் திறனுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி உள்ளது. அதை முதலில் சரி செய்ய வேண்டும் என்று அமைச்சர் படிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
கோவை- அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் (ICT) 57வது பதிப்பு மாநாடு ஆகஸ்ட் 20ம் தேதி (செவ்வாய்கிழமை) நடைபெற்றது. மெகா தொழில் நிறுவனத் தொடர்பு நிகழ்வாக இந்த மாநாடு நடைபெற்றது. மேலும் இந்த மாநாடு தமிழ்நாடு தி குளோபல் ஸ்கில் கேப்பிட்டல் என்ற கருப்பொருளில் நடந்து முடிந்தது. இந்நிகழ்ச்சியில் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மேலும் இந்த மாநாடு தமிழ்நாட்டை உலகளாவிய மையமாக மாற்றுவதற்கான பாடத்திட்டத்தைப் பட்டியலிடும் நோக்கத்துடன் கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் கல்வியாளர்களின் ஒருங்கிணைப்பாக நடந்தது. இதில் பல்வேறு கல்வி நிறுவனங்களை சார்ந்த தலைவர்கள், நிர்வாகிகள், தொழில்துறை தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியல் ஐடி துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் (ICT) 57வது பதிப்பு மாநாடு, மிகவும் சிறப்புமிக்க மாநாடு.. இந்த மாநாட்டின் கருப்பொருள் முதலமைச்சரின் அறிக்கையை எதிரொலிக்கிறது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஏற்கனவே அனைத்து துறைகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தேசிய அளவிலான தரவரிசையில் பல சிறந்த கல்லூரிகள் தமிழ்நாட்டில் இருந்தாலும், வேலைவாய்ப்புகள் பெறும் வகையில் அவை பட்டதாரிகளை உருவாக்கவில்லை.. இதற்கு முக்கிய காரணம் கல்லூரிகளில் மாணவர்கள் பெறும் கல்வித்திறனுக்கும் வேலைவாய்ப்புக்கான தேவைப்படும் திறனுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி உள்ளது. அதை முதலில் சரி செய்ய வேண்டும்.
தேசிய தரவரிசையில் பல்வேறு கல்லூரிகள் இருப்பினும், இங்குள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பு போதுமானதாக உருவாக்கப்படவில்லை என்பதால் , தமிழ்நாட்டிலும், உலகச் சந்தைகளிலும் முழுத் திறனையும் தமிழகத்தால் அடைய முடியவில்லை" என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
இந்த கருத்து முற்றிலும் உண்மை என்று கூறியுள்ள நெட்டிசன்கள், வளர்ந்த நாடுகளில் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கூட தங்கள் புத்தகங்களுக்கு வெளியே படிக்கிறார்கள். ஆனால் இங்கே, முதுநிலைப்பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் கூட தங்கள் புத்தகங்களை ஒட்டிக்கொண்டு தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்கிறார்கள். இப்படி படிப்பது அவர்களுக்கு ஒரு தொழில்முறை கல்வியை வழங்காது. கல்வி முறையில் சீரமைப்பு தேவை என்று கூறியுள்ளனர்.
இதனிடையே அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கருத்தை வரவேற்றுள்ள சில பாஜகவினர், உண்மையை ஒப்புக்கொண்டிருப்பதாக பிடிஆரை பாராட்டி உள்ளனர். அதேநேரம் இப்போதுதான் தேசிய அளவிலான தரவரிசையில் பல சிறந்த கல்லூரிகள் தமிழ்நாட்டில் சிறந்த கல்வி நிறுவனங்கள் உள்ளதாக மத்திய அரசே பாராட்டி உள்ள நிலையில், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் இந்த பேச்சு திமுகவினரிடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications