தடுப்பூசி எதிர்ப்பாளர்களுக்கு பாடம்.. நடக்க இயலாத மனைவியை சுமந்துசென்று தடுப்பூசி செலுத்திய முதியவர்
கோவை: இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை மக்களை போட்டு பாடாய்படுத்தி வருகிறது. கொரோனாவை விரட்டுவதற்காக இந்தியாவில் கடந்த ஜனவரி 15-ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிகள் செயல்பாட்டில் உள்ளன. முதல் கட்டமாக மருத்துவ பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
அதனை தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசிகள் பெற்று வருகின்றனர்.

தடுப்பூசி வெறுப்பாளர்கள்
கொரோனா தொற்றை விரட்ட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் ஒரு தரப்பினர் தடுப்பூசி போட்டுக் கொண்டாலும், வேறு சிலரோ கொரோனா தடுப்பூசியின் பெயரை கேட்டாலே பதறியடித்து ஓடுகின்றனர். தடுப்பூசியை ஏதோ விஷ ஊசி போல் நினைத்து பதறுகின்றனர். தான் ஊசி போடாமல் இருப்பது மட்டுமல்லாமல் மற்றவர்களிடமும் ''ஊசி போடாதீர்கள்.. விவேக் நிலைமையை பாத்திங்கல்ல'' என்று சம்பந்தமே இல்லாமல் வதந்தியை கிளப்பி வருகின்றனர்.

உணர வைத்த முதியவர்
இப்படிப்பட்ட நபர்களின் முகத்தில் 'பளார்' என்று அறைந்து தடுப்பூசியின் முக்கியத்துவத்தை உணர வைத்துள்ளார் கோவையை சேர்ந்த ஒரு முதியவர். கோவை துடியலூர் என்.ஜி.ஜி.ஓ காலனியில் வசிக்கும் ஜெகநாதன் (76) என்பவர்தான் அந்த முதியவர். ஜெகநாதனும், அவரது மனைவியுமான விஜயலட்சுமியும் (69) தடுப்பூசி போட்டுக் கொள்ள முடிவு செய்தனர். ஜெகநாதன் விரும்பியபடி காரில் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியும்.

மனைவியை சுமந்து சென்றார்
ஆனால் கொஞ்சம் கூட நடக்க முடியாத நிலையில் இருக்கும் விஜயலட்சுமி துடியலூர் அரசு மருத்துவமனையின் தடுப்பூசி மையத்துக்கு செல்வது இயலாத காரியம். ஆனால் மனைவியும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்தார் ஜெகநாதன். இதனால் மனைவியை இரு கைகளாலும் தூக்கி சுமந்து சென்று காரில் அமர வைத்தார். பின்பு அரசு மருத்துவமனைக்கு முன்பு காரை நிறுத்தி விட்டு, மனைவியை அப்படியே சுமந்து கொண்டு தடுப்பூசி மையத்துக்கு சென்றார்.

பாடம் நடத்தியுள்ளார்
பின்னர் இருவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு திருப்தியுடன் காரில் வீட்டுக்கு திரும்பி சென்றனர். தடுப்பூசி முக்கியத்துவத்தை கருதி தள்ளாத வயதிலும் முதியவர் ஜெகநாதன் செய்த செயல் தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புபவர்களுக்கு பாடமாக அமைந்துள்ளது. முதியவரின் செயலால் நெகிழ்ச்சி அடைந்த பலரும் அவரை பாராட்டு மழையில் நனைய வைத்து வருகின்றனர்.

இளம் தம்பதிகளுக்கு இலக்கணம்
இது தவிர, மணம் முடித்த 2 நாளில் தகராறு, 20 நாளில் விவாகரத்து என்று ஜெட் வேகத்தில் வாழ்க்கையை தொலைத்து கொண்டிருக்கும் பல இளம் தம்பதிகளுக்கும், ஜெகநாதன்-விஜயலட்சுமியின் அன்பான கணவன்-மனைவி உறவு இலக்கணமாக அமைந்துள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications