கோவை அருகே திருப்பூர் இளைஞர்கள் போலீஸ் ஸ்டேசனில் மீண்டும் ரீல்ஸ் சேட்டை.. மறக்க முடியாத பரிசு

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை கருமத்தம்பட்டி அருகே சேலம்-கொச்சி புறவழிச்சாலையில் ரீல்ஸ் எடுத்தபடி சென்றதால் இளைஞர்களின் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். ஆனால் அந்த 3 இளைஞர்களும் கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்திலும் ரீல்ஸ் எடுத்து வெளியிடடனர். இதையடுத்து 3 பேரின் பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் பின்னர் அந்த 3 பேரும் வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருக்கிறார்கள்.

பெங்களூரில் இருந்தோ, சென்னையில் இருந்தோ கேரளா செல்ல வேண்டும் என்றால் கோவையை கடந்து தான் போக வேண்டும்.கோவை வழியாக சேலம்-கொச்சி சாலை செல்கிறது. அவினாசி முதல் கோவை நீலம்பூர் வரை எந்த இடையூறும் எந்த இடத்திலும் இருக்காது. சராசரியாக 80 கிமீ முதல் 100 கிமீ வேகத்தில் கூட போக முடியும். இந்த சாலை சில இடங்களில் 6 வழிச்சாலையாகவும், சில பகுதியில் 4 வழிச்சாலையாகவும் உள்ளது.

An unforgettable gift as Tiruppur youths take reels again at the police station near Coimbatore

இந்த சாலையில் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே 3 இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்றபடி ரீல்ஸ் வீடியோ எடுப்பதாகவும், அது மற்ற வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருப்பதாகவும் கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே போலீசார் விரைந்து வந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் அதிவேகமாக சென்று ரீல்ஸ் எடுத்தபடி 3 வாலிபர்கள் வந்தனர். உடனே போலீசார் அந்த 3 பேரையும் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள் திருப்பூரை சேர்ந்த டிக்சன் (வயது 21), சஞ்சய் (21), கோவை அருகே மலுமிச்சம்பட்டியை சேர்ந்த தமிழ் (21) என்பதும், அவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்று ரீல்ஸ் எடுத்தது தெரிந்தது. உடனே போலீசார் அந்த 3 பேருக்கும் அபராதம் விதித்தனர். மேலும் போலீசார் அந்த 3 பேரையும் போலீஸ் நிலையத் துக்கு அழைத்துச் சென்று அறிவுரை வழங்கினர். இதைத் தொடர்ந்து அந்த 3 பேரும் அபராத தொகையை செலுத்தி விட்டு போலீஸ் நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானார்கள்.

இதற்கிடையே அந்த 3 பேரும் கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத் தை விட்டு வெளியே வருவது போன்றும், அவர்கள் மோட்டார் சைக்கிளில் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களுக்கு இடையே அதிவேகமாக செல்வது போன்ற ரீல்ஸ் வீடியோவை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் மீண்டும் பதிவேற்றம் செய்தனர். அது வேகமாக பரவியது. அதை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

போலீஸ் நிலையம் முன்பு நிற்பதுபோன்றும், மோட்டார் சைக்கிளில் அதி வேகமாக செல்வது போன்றும் ரீல்ஸ் வெளியான நிலையில், பலரும் விமர்சிக்க தொடங்கினார்கள். இதை தொடர்ந்து போலீசார் அந்த 3 பேரையும் போலீஸ் நிலையம் வரவழைத்தனர். அதன் பேரில் அவர்கள் 3 பேரும் மீண்டும் போலீஸ் நிலையத்துக்கு வந்தார்கள்.

இதைத்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்று ரீல்ஸ் வெளியிட்டதற்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, அந்த 3 பேரின் மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தார்கள். மேலும் அவர்கள் 3 பேரிடமும் இனி மேல் சாலைகளில் அதிகவேகமாக சென்று ரீல்ஸ் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கடுமையாக எச்சரித்தனர்.

இதனால் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்று ரீல்ஸ் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வாலிபர்கள் 3 பேரும் தங்களின் செயலுக்கு வருத்தம் தெரிவித்து ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளனர். அந்த வீடியோவில் அவர்கள் 3 பேரும் கூறுகையில், நாங்கள் 3 பேரும் கோவை கருமத்தம்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்றோம்.

இது தொடர்பாக மற்ற வாகன ஓட்டிகள் கொடுத்த தகவல் அடிப்படையில் கருமத்தம்பட்டி போலீசார் எங்கள் 3 பேரையும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று அபராதம் விதித்து அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

ஆனால் நாங்கள் காவல் நிலையத்தை விட்டு வெளியே வரும்போது நாங்கள் விளையாட்டுத்தனமாக வீடியோ எடுத்து அதையும், மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்றதையும் இணைத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து விட்டோம்.இது தவறு தான். எனவே இதுபோன்று யாரும் சாலையில் செல்லும் போது பொதுமக்களுக்கு இடையூறு செய்வது போன்ற வீடியோ எடுக்க வேண்டாம். அது போன்று போலீஸ் நிலையத்தில் போலீசாருக்கு இடையூறாக வும் நடக்க வேண்டாம். அது எவ்வளவு பெரிய தவறு என்று போலீசார் எங்களுக்கு அறிவுரை வழங்கிய பிறகு தான் எங்களுக்கு தெரியவந்தது. எனவே இதுபோன்ற யாரும் செய்யக்கூடாது" இவ்வாறு கூறினார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+