தூங்குனது தப்பா.. கோவையில் ஓடும் லாரியில் மாற்று டிரைவருக்கு மறக்க முடியாத சம்பவம்
கோவை: கேரளம் மாநிலம் பாலக்காடு அருகே உள்ள கீழ கேத்திர பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணதாஸ்.. இவர் லாரி டிரைவர் ஆவார். அதேபோல் மாத்தூர் வெங்கார பரப்பு பகுதியைச் சேர்ந்த மணிகண்டனும் டிரைவர் ஆவார். இருவரும் தனியார் லாரி போக்குவரத்து நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள். இதில் ஓடும் லாரியில் தூங்கிக்கொண்டே வந்த கிருஷ்ணதாசுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவத்தை மணிகண்டன் செய்துள்ளார்.
கேரளம் மாநிலம் பாலக்காடு அருகே உள்ள கீழ கேத்திர பகுதியைச் சேர்ந்த 50 வயதாகும் கிருஷ்ணதாஸ் டிரைவர் ஆவார். அதேபோல் மாத்தூர் வெங்கார பரப்பு பகுதியைச் சேர்ந்த 52 வயதாகும் மணிகண்டனும் டிரைவர் ஆவார். இவர்கள் 2 பேரும் அங்குள்ள தனியார் லாரி போக்குவரத்து நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார்கள்.

2 பேரும் அடிக்கடி வெளியூர்களுக்கு சரக்கு ஏற்றி கொண்டு லாரியில் சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். வெளியூர்களுக்கு நீண்ட தூரம் பயணிக்கும்போது கிருஷ்ணதாஸ் தூங்கியுள்ளார். இதனால் மணிகண்டனே நீண்ட தூரம் லாரியை ஓட்ட வேண்டிய நிலை அடிக்கடி ஏற்பட்டிருக்கிறது.
இதனால் டிரைவர் மணிகண்டன் ஆத்திரம் அடைந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று 2 பேரும் லாரியில் கோவையை நோக்கி வந்து கொண்டிருந்துள்ளார்கள். லாரியை மணிகண்டன் ஓட்டி வந்துள்ளார். அப்போது சுந்தராபுரம் அருகே லாரி சென்று கொண்டு இருந்தது. லாரியில் இருந்த கிருஷ்ணதாஸ் தூங்கிக்கொண்டிருந்தாராம். இதனைப் பார்த்த மணிகண்டன் ஆத்திரம் அடைந்தார்.
அவர் கிருஷ்ணதாசிடம், லாரியை நானே ஓட்டிக் கொண்டிருக்கிறேன். நீ தூங்கிக்கொண்டு சம்பளத்தை மட்டும் வாங்கிக் கொள்கிறாய் என்று கூறி தகராறில் ஈடுபட்டாராம். இதில் 2 பேருக்கும் வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த மணிகண்டன், கிருஷ்ணதாசைத் தாக்கி ஓடும் லாரியிலிருந்து கீழே தள்ளி விட்டதாக சொல்லப்படுகிறது.
இதனால் கிருஷ்ணதாசுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து கிருஷ்ணதாசின் மனைவி சரிதா சுந்தராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் மணிகண்டனை கைது செய்தனர். பின்னர் அவரை மதுக்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications