கோவையில் திருமணமான இளம் பெண்ணுடன் காதல்.. உல்லாசம்.. புகைப்படத்தால் கம்பி எண்ணும் திண்டுக்கல் இளைஞர்
கோவை: கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் 33 வயது பெண்ணுக்கு திருமணம் ஆகிவிட்டது.இவருக்கு குனியமுத்தூரில் வசித்து வந்த திண்டுக்கல் மாவட்டம் செங்குறிச்சியை சேர்ந்த பொன்னுசாமி என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதாம். இருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு தொடர்ந்ததாம். அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்த அந்த பெண் திடீரென கள்ளக்காதலை கைவிட்டாராம்.இதனால் கோபம் அடைந்த இளைஞர் செய்த செயலால் அந்த பெண் ஆடிப்போனார். அந்த இளைஞனும் தற்போது கம்பி எண்ணி வருகிறார்.
திருமணத்தை மீறிய உறவு என்பதை மோசமான பழிவாங்கலுக்கு இருதரப்புமே பயன்படுத்துகிறார்கள். திருமணத்தை மீறிய உறவில், அதாவது கள்ளக்காதலில் எப்படியோ விழுந்த ஜோடிகள், அதில் இருந்து மீள நினைத்தாலும், துணையில் இருப்பவர்கள் விடுவது இல்லை.. ஆண்என்றால் அந்த பெண்ணின் புகைப்படங்களை உறவினர்களுக்கு அனுப்புவேன் என்று மிரட்டி சாதிப்பது நடக்கிறது. அதேபோல் பெண் என்றால்,உறவினர்களிடம் கூறுவேன், மனைவியிடம் கூறுவேன், போலீசிடம் கூறி அசிங்கப்படுத்துவேன் என்று மிரட்டி சாதிப்பதும் நடக்கிறது.

கோவையில் ஒரு திருமணமான இளம்பெண் கள்ளக்காதலில் விழுந்தார். அவர் கள்ளக்காதலனுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார்.ஆனால் கள்ளக்காதலை கைவிட்டு விட்டு வழக்கமான வாழ்க்கையை வாழ நினைத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த காதலன், அந்த பெண்னின் வாழ்க்கையில் நினைத்தே பார்க்க முடியாத விஷயங்களை செய்துவிட்டார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் 33 வயது இளம் பெண்ணுக்கு திருமணம் ஆகிவிட்டது. குறிப்பிட்ட இளம் பெண்ணுக்கும், குனியமுத்தூரில் வசித்து வந்த திண்டுக்கல் மாவட்டம் செங்குறிச்சியை சேர்ந்த பொன்னுசாமி (வயது 27) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியிருக்கிறது.
இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்ததுடன், செல்போனிலும் பேசி காதலை வளர்த்து வந்துள்ளனர். இந்த தகவல் பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இதனால் அந்த பெண்ணை அவரது குடும்பத்தினர் கண்டித்தனர். அதன்பின்னர் பெண், பொன்னுசாமி உடனான கள்ளக்காதலை கைவிட்டதாக கூறப்படுகிறது. .
கோவையில் 2 சொகுசு கார்களுடன் எஸ்கேப் ஆன யூடியூபர்.. நம்பவே முடியாத அளவிற்கு நண்பருக்கு நடந்த துரோகம்
ஆனால் பொன்னுசாமி கள்ளக்காதலை கைவிடாமல் அந்த பெண்ணை தொடர்ந்து தன்னுடன் பழகுமாறு வற்புறுத்தினாராம். அதற்கு மறுத்ததால் அந்த பெண்ணின் தனிப்பட்ட புகைப்படங்களை அவரது உறவினர்களின் செல்போனுக்கு அனுப்பி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனை அந்த பெண் கண்டித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பொன்னுசாமி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று தகாத வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டாராம். அங்கிருந்த பெண்ணின் தாயார், பொன்னுசாமியை வெளியே செல்லும்படி கூறினார். அப்போது பொன்னுசாமி, அந்த பெண்ணின் தாயாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்னுசாமியை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications