விடலையே.. "இதோ" பாருங்க.. கோலி குண்டு, ஆணிகளை எடுத்து காண்பித்த அண்ணாமலை.. சுளீர் அட்டாக்!
கோயம்புத்தூர்: இன்று கோயம்புத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை தனது பாக்கெட்டில் இருந்து கோலிகுண்டுகளையும், ஆணிகளையும் எடுத்து காண்பித்து புகார் வைத்தார்.
கோயம்புத்தூர் கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்ற கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதிக்கு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை வந்தார். கோவில் உள்ளே சென்று வழிபாடு செய்து, பின்னர் கந்தசஷ்டி கவசம் பாடினார்.
உள்ளே பூசாரிகளிடம் நீண்ட நேரம் அண்ணாமலை ஆலோசனை செய்தார். போலீசார் நடத்திய விசாரணை பற்றி அவர்களிடம் கேட்டறிந்தார்.

அண்ணாமலை பேச்சு
இந்த நிலையில் வழிபாட்டிற்கு பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, ஆளும் திமுக அரசிற்கு நாங்கள் நெருக்கடி கொடுக்கவில்லை. மாநில அரசுக்கு நான் கேள்வி கேட்க காரணம் இருக்கிறது. நான் மட்டும் கேள்வி கேட்கவில்லை. செய்தியாளர்களும் கேள்வி கேட்கிறார்கள். அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து அவர்களை ஓரமாக உட்கார வைக்க வேண்டும் என்று எண்ணம் கிடையாது. அவர்கள் நன்றாக ஆட்சி செய்ய வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்.

ஆட்சி செய்ய வேண்டும்
திமுக இன்னும் 4 ஆண்டுகள் ஆட்சி செய்ய வேண்டும். மக்களுடைய மதிப்பை பெற்று மு க ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்று உள்ளார். பதவி ஏற்ற போதே நாங்கள் சொன்னோம். அவர் ஆட்சி செய்ய போதிய ஆலோசனைகளை வழங்குவோம். ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்குவோம் என்று கூறினோம். அப்படித்தான் செய்து வருகிறோம்.

உயிர்சேதம்
மக்களுக்கு எந்த விதமான உயிர்சேதமும் ஏற்பட்டுவிட கூடாது என்பதால்தான் நாங்கள் பேசி வருகிறோம். கோவில் பக்கத்தில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் இவை, என்று கூறி பாஜக தலைவர் அண்ணாமலை பாக்கெட்டில் இருந்து கோலி குண்டு மற்றும் ஆணிகளை எடுத்து காட்டினார். தொடர்ந்து பேசிய அவர்.. என் கையில் இருப்பவை கோவிலுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள். கோவில் பக்கத்தில் இருந்து மக்கள் கொடுத்தது இது.

ஆணிகள்
இவை ஆணிகள் மற்றும் கோலிகுண்டுகள். இதை செய்தவர்கள் சாதாரணமாக செய்யவில்லை. வேண்டுமென்றே உயிர்சேதம் ஏற்படுத்த வேண்டும் என்று செய்து இருக்கிறார்கள். அதில் மாற்றுக்கருத்து எதுவும் இல்லை. தொடர்ந்து பாஜக வைக்கும் கோரிக்கை, கேள்வி ஒன்றுதான். சில தவறுகள் நடந்து உள்ளது. அதை திருத்த வேண்டிய கடமை போலீசுக்கு உள்ளது. இதை சரி செய்ய வேண்டும்.

கோலிகுண்டுகள்
கடவுள் உதவியால் நமக்கு எதுவும் நடக்கவில்லை. நிலைமை மோசமாகும் முன் உளவு அமைப்புகளை சரி செய்ய வேண்டும். நிலைமை மோசமான பின் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு வைக்க கூடாது. உளவுத்துறைக்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கைகளை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இன்னும் இதை சிலிண்டர் விபத்து என்று சொல்வதை எந்த விதத்தில் ஏற்றுக்கொள்ள முடியும், என்று அண்ணாமலை குறிப்பிட்டு உள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications