நாங்கள் நாய்கள் கிடையாது.. 6 அறிவு இருக்கும் மனிதர்கள்.. அண்ணாமலைக்கு அருண்ராஜ் பதிலடி!
கோவை: அண்ணாமலை வேண்டுமானால் நாயாக இருக்கலாம், நாங்கள் 6 அறிவு இருக்கும் மனிதர்கள் என்று தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் பதிலடி கொடுத்துள்ளார். தவெக தலைவர் விஜய் முன்னாள் நடிகர் என்று கூறிய அருண்ராஜ், நடிகர் விஜய்யை விடவும் அரசியல்வாதியாக விஜய் இன்னும் வலிமையானவர் என்று தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் நடந்த தவெக பொதுக்கூட்டத்திற்கு பின் அக்கட்சியினர் சுறுசுறுப்பாகி இருக்கின்றனர். வழக்கமாக மாதத்திற்கு ஒன்றோ, இரண்டோ நிகழ்ச்சிகளை நடத்தும் தவெக தலைவர் விஜய், டிசம்பர் 3வது நிகழ்ச்சியில் பங்கேற்க தயாராகி இருக்கிறார். புதுச்சேரியில் பொதுக்கூட்டத்தை நடத்த தவெக, அடுத்ததாக ஈரோடு மாவட்டத்தில் நடத்தியது. நாளை சென்னை அருகே கிறிஸ்துமஸ் விழாவில் விஜய் பங்கேற்க உள்ளார்.

இதனிடையே ஈரோடு மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தின் போது விஜய் ரசிகை ஒருவர் கொடுத்த பேட்டி சோசியல் மீடியாவில் டிரெண்டாகியது. அதில் அந்த பெண், தாம் கல்லூரியில் படிப்பதாகவும், இன்று கல்லூரியில் நடக்கும் தேர்வை எழுதாமல் விஜய்யை பார்க்க வந்துள்ளதாகவும் கூறி இருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அதேபோல் விஜய்க்கு ஓட்டு போடவில்லை என்றால் குடும்பத்தினருக்கு விஷம் வைத்துவிடுவேன் என்று பெண் ஒருவர் கூறி இருந்தார். இந்த நிலையில் தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தவெக கூட்டணி குறித்து உரிய முடிவு எடுக்கப்படும். விரைவில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்படும்.
தொடர்ந்து, அண்ணாமலை வேண்டுமானால் மோடியின் நாயாக இருக்கலாம். ஆனால் நாங்கல் யாரும் நாய்கள் கிடையாது. குறிப்பாக குரைக்கும் நாய் கிடையாது. நாங்கள் 6 அறிவுள்ள மனிதர்கள். பெரியார் கூறியபடி உண்மையான தொண்டர்கள். தரம்தாழ்ந்து விமர்சனம் செய்தால் மீடியா வெளிச்சம் கிடைக்கும். ஆனால் விஜய் சொல்வதை போல் டீசண்ட் அரசியல் செய்கிறோம்.
அதேபோல் விஜய் தற்போது நடிகர் அல்ல.. முன்னாள் நடிகர் தான். மக்களுக்காக அரசியலில் சேவை செய்ய வேண்டும் என்று செயல்படுகிறார். ஈரோடு மாவட்டத்தில் ஒரு லட்சம் பேர் நடிகர் விஜய்யை பார்க்க வரவில்லை. அவர்கள் தவெக தலைவார் விஜய்யை தான் பார்க்க வந்தார்கள். இந்த புரிதலுடன் பேச வேண்டும். நடிகர் விஜய்யை விடவும் அரசியல்வாதி விஜய் வலிமையானவர்.
அதேபோல் தவெகவின் தேர்தல் அறிக்கை மக்களுக்கானதாக இருக்கும். மக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு, தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும் என்று கூறினார். ஈரோடு மாவட்ட கூட்டத்தில் சில பெண்கள் பேசிய விவகாரத்தை பெரிதுபடுத்தக் கூடாது. அது விஜய் மீதான அன்பு காரணமாக சிலர் பேசுவார்கள். ஒரு சிலர் பேசும் கருத்தை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்தமாக பார்க்காதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications