Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"செருப்பால் அடிச்சா கூட பொறுத்துக்குவேன்.. ஆனா".. சூடான அண்ணாமலை.. பற்றி எரியும் அரசியல் களம்!

Subscribe to Oneindia Tamil

கோவை: "என்னை செருப்பால் அடித்தால் கூட பொறுத்துக் கொள்வேன், ஆனால், எனது நேர்மையை குறை சொன்னால் சும்மா விடமாட்டேன்" என கொந்தளித்துள்ளார் அண்ணாமலை. அதிமுக - பாஜக இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பைப் பற்ற வைத்துள்ளது.

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பற்றி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது அதிமுகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது. ஏற்கனவே ஜெயலலிதா பற்றிப் பேசியபோது பாஜக- அதிமுக இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இந்நிலையில், அண்ணாவை அண்ணாமலை விமர்சித்துப் பேசியுள்ளதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடுமையாக எதிர்வினை ஆற்றி வருகின்றனர். குறிப்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், அண்ணாமலை திமுகவுடன் சேர்ந்து திட்டம் தீட்டுகிறாரோ என சந்தேகம் கிளப்பியிருந்தார்.

Annamalais response created sensation in political arena: ADMK leaders angry

ஆத்திரமடைந்த அண்ணாமலை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் கடுமையான விமர்சனம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, "நல்ல போலீஸை பார்த்தால் திருடனுக்கு பயம் வரத்தான் செய்யும். தேள் கொட்டியதுபோல தான் இருக்கும். என்னுடைய தரத்தை தாழ்த்தி நான் எப்போம் அவதூறான வார்த்தைகளை முன்வைக்க மாட்டேன். அரசியல் களம் மாறிவிட்டது என தலைவர்கள் புரிந்து கொள்கிறார்கள். இது இளைஞர்களுக்கான அரசியல்.

இன்னும் பழைய பஞ்சாங்கத்தை பேசிக் கொண்டிருந்தால் யாரும் ஓட்டு போட மாட்டார்கள். எப்படிப்பட்ட தலைவர்கள் வரவேண்டும் என இளைஞர் சக்தி தீர்மானிக்கிறது. தமிழகத்தில் அந்த மாற்றம் வந்தே தீரும். இன்னொரு கட்சியை தாழ்த்தித்தான் முன்னேற வேண்டும் என்ற அவசியம் பாஜகவுக்கு இல்லை. எங்களுடைய உழைப்பில் இந்த கட்சி வளர வேண்டும். இதற்கு முன்பு யாரெல்லாம் தமிழகத்தில் அமைச்சர்களாக இருந்து வசூல் செய்துள்ளார்களோ, அவர்கள் அனைத்தையும் வசூலாகத்தான் பார்க்கிறார்கள்.

வசூல் மந்திரிகள்: அவர்கள் எல்லாம் மந்திரிகளாக இருந்ததே வசூல் செய்வதற்காகத்தான். அதனால் நாமும் நடைப்பயணம் மேற்கொள்வதை வசூல் என நினைத்துக் கொள்கிறார்கள். வசூல் செய்து யாரெல்லாம் அமைச்சர்களாக இருந்தார்களோ, அவர்களுக்கெல்லாம் நேர்மை என்கின்ற வார்த்தைக்கு அர்த்தம் கூட தெரியாது. நேர்மை அரசியல் செய்பவர்களுக்குத்தான் நான் செய்யும் நேர்மை அரசியல் தெரியும்.

அவர் இப்படி பேசுவது புதிதல்ல. பாஜகவின் வளர்ச்சி பார்த்து பொறாமையில் பேசுகிறார். அவருடைய தொகுதிக்கு இன்னும் பாஜக செல்லவில்லை. போகும்போது பாருங்கள். எங்கெல்லாம் பாஜக இல்லை என்று கூறினார்களோ, அங்கெல்லாம் சாதாரணமாக 12,000-க்கும் மேற்பட்டோர் நடைப்பயணம் மேற்கொள்கிறார்கள். சில தலைவர்களுக்கு அரசியல் களம் மாறிவிட்டது என்பதை புரிந்து கொள்வதற்கே இன்னும் 10 ஆண்டுகள் வேண்டும்.

அண்ணாதுரையை நான் என்றும் தவறாகப் பேசியது இல்லை. நடந்த சம்பவத்தைத்தான் எடுத்துக் கூறினேன். என்னிடம் மிரட்டல் உருட்டல் எல்லாம் வேலைக்கு ஆகாது. எனக்கும் கடும் சொற்கள் வரும். நேர்மையை பற்றி சி.வி.சண்முகம் எனக்கு பாடம் எடுக்கக் கூடாது. சி.வி.சண்முகம் 6 மணிக்கு முன்பு ஒரு மாதிரி பேசுவார். 6 மணிக்கு பின்பு ஒரு மாதிரி பேசுவார். காவல்துறையில் 10 ஆண்டுகள் துப்பாக்கி பிடித்த கை இது. அவர் மந்திரியாக இருக்கும்போது என்னென்னவெல்லாம் செய்தார் என்பது எனக்கு தெரியும். அதற்குள் நான் போகவில்லை.

செருப்பால் அடித்தால் கூட: என்னை செருப்பால் அடித்தால் கூட பொறுத்துக்கொள்வேன். ஆனால், என்னுடைய நேர்மையை கொச்சைப்படுத்தினால் யாராக இருந்தாலும் நான் விடமாட்டேன். இது என்னுடைய தன்மான பிரச்னை. கூட்டணி தேவைதான். ஆனால் அதற்காக அடிமையாக இருக்க முடியாது. கூனி கும்பிட்டு பதவிக்கு வந்தீர்கள் என்றால்.. .அப்படிப்பட்ட அவசியம் பா.ஜ.க-விற்கு கிடையாது. பா.ஜ.க தனித்தன்மையாக 2026-ம் ஆண்டு பவருக்கு வரும். என்னைப் பொறுத்தவரை நேர்மையாக பேச வேண்டும். என்னுடைய நேர்மையை கொச்சைப்படுத்தினால் அவர்களைப் பற்றி தோண்ட ஆரம்பித்து விடுவேன்." என எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியுள்ளார் அண்ணாமலை.

அண்ணாமலையின் இந்த பேச்சு அதிமுகவினரை மேலும் கொந்தளிக்கச் செய்துள்ளது. கூட்டணியில் இருக்கும் அதிமுக - பாஜக இடையேயான இந்த மோதல் போக்கு அரசியல் களத்தைச் சூடாக்கியுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்களின் பேச்சுகளுக்கு அண்ணாமலை சூடாக ஆற்றியுள்ள எதிர்வினை, அதிமுக முகாமுக்குள் இன்னும் என்னென்ன வெடியை பற்ற வைக்கப்போகிறதோ..? பொறுத்திருந்து பார்ப்போம்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+