திமுக கூட்டணியில் இரட்டை இலக்க தொகுதி கேட்கிறோமா?.. கோவையில் வைகோ விளக்கம்

Subscribe to Oneindia Tamil

கோவை: இரட்டை இலக்க தொகுதி பற்றி இப்போது பேச முடியாது. பேச்சுவார்த்தை குழு அமைத்த பின்னர்தான் தொகுதிகள் குறித்து பேச முடியும். பேச்சுவார்த்தை குழு அமைத்த பின்னர்தான் தொகுதிகள் குறித்து பேச முடியும். தொகுதி பங்கீட்டிற்காக திமுக பேச்சுவார்த்தை குழு அமைத்த 3 மணி நேரத்தில், மதிமுக சார்பில் குழு அமைக்கபடும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய பட்ஜெட் மிகுந்த ஏமாற்றம் அளிக்கின்றது.

Vaiko

5 மாநில சட்டமன்ற தேர்தல் வருவதால் அங்கு அதிக ஒதுக்கீடு செய்யபடும் என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றமானது. அமெரிக்க வரி கொடுமையில் இருந்து தப்பிக்க, ஜரோப்பிய யூனியன் ஒப்பந்தம் ஈடு கொடுக்கும்.

ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் 2027 ஏப்ரலுக்கு பின்புதான் வரும், அதுவரை மத்திய அரசு எப்படி சமாளிக்க போகின்றது. பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. கோவை, கரூர் ,திருப்பூர் நூற்பாலைகளுக்கு ஊக்கம் அளிக்கும் திட்டங்கள் இல்லை. 11.7 லட்சம் கோடி கடன் வாங்க போகின்றோம் என்கின்றார்கள், ஆனால் 7 சதவீத வளர்ச்சியை அடைவோம் என்பது ஏற்கும் விதமாக இல்லை.

மெட்ரோ திட்டங்களுக்கு அறிவிப்பு இல்லை. ஏற்கனவே இருக்கும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை, மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகம் வஞ்சிக்கப்படுகின்றது. ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பது போன்ற கோஷங்கள், கோரிக்கைகளை நாங்கள் என்றைக்கும் வைக்கவே இல்லை. அப்படி கோரிக்கை வைக்கின்ற நோக்கமும் இல்லை. திமுக நிச்சயம் தனி பெரும்பான்மை பெறும். மீண்டும் 2026 ல் ஸ்டாலின் முதல்வராக அமர்வார், திராவிடம் மாடல் ஆட்சி தொடரும்.

பாலத்தீனம் தனி நாடாக இந்தியா ஆதரவு அளித்து இருப்பது நல்ல விடயம். பாலஸ்தீனத்தை நேரு காலத்தில் இருந்து இந்தியா ஆதரித்தது. இடைக்காலத்தில்
நாரேந்திரமோடி பொறுப்புக்கு வந்த பின்பு, இஸ்ரேலின் உறவை நெருக்கமாக்கிக் கொண்டனர். பாலஸ்தீனத்திற்காக ஐ.நா மன்றத்திலோ மற்ற இடங்களிலோ இந்தியா குரல் கொடுக்காமல் இருந்தது.

பாலஸ்தீனம் தனி நாடாக வேண்டும் என்ற கோரிக்கையை ஆரம்பத்திலிருந்து நாம் ஆதரித்து வந்திருக்கிறோம், எங்கள் நிலைப்பாடு அது தான். எம்ஸ்டீன் பைல்லில் பிரதமர் நரேந்திர மோடி பெயர் இருந்திருப்பதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு, நரந்திரமோடிக்கு நாட்டில் நல்ல பெயர் இல்லை என்றார்.

இரட்டை இலக்க தொகுதி பற்றி இப்போது பேச முடியாது. பேச்சுவார்த்தை குழு அமைத்த பின்னர்தான் தொகுதிகள் குறித்து பேச முடியும். தொகுதி பங்கீட்டிற்காக திமுக பேச்சுவார்த்தை குழு அமைத்த 3 மணி நேரத்திற்குள், மதிமுக சார்பில் குழு அமைக்கப்படும். எத்தனை இடங்கள் கேட்போம் என்பதை இப்போது செல்ல முடியாது. ஒரு சிலர் தங்கள் மனதிற்கு தோன்றியதை சொல்கின்றனர். ஆனால், நாங்கள் அப்படி சொல்ல மாட்டோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+