கோவையில் பெரும் வரவேற்பு.. பெங்களூர்- எர்ணாகுளம் வந்தே பாரத் ரயில்.. முழுமையாக வெயிட்டிங் லிஸ்ட்
கோவை: கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு கோவை வழியாக வந்தே பாரத் புதிய ரயில் சேவை தொடங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ந் தேதி வாரணாசியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த புதிய ரயில் சேவை நேற்று முதல் வழக்கம்போல் இயங்க தொடங்கியது. பெங்களூர் எர்ணாகுளம் வந்தே பாரத் ரயிலிலுக்கு கோவை மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. காத்திருப்பு பட்டியல் தொடர்ந்து அதிக அளவில் உள்ளது.
பிரதமர் மோடி கடந்த 2024 தேர்தலில் வென்று எம்பியாக தேர்வானது உத்தரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசி தொகுதியாகும். கடந்த 8ம் தேதி தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது எர்ணாகுளம்-பெங்களூர் உள்பட 4 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து அவர் தொடங்கி வைத்தார். அதில் ஒன்று, எர்ணாகுளம் மற்றும் பெங்களூர் இடையே இயக்கப்படுகிறது. இந்த ரயில் தமிழகத்தின் கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகள் வழியாக இயக்கப்படுகிறது. புதன்கிழமை தவிர வாரத்தின் மற்ற நாட்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

எர்ணாகுளம் பெங்களூர் வந்தே பாரத் ரயில்
பெங்களூருவில் இருந்து காலை 5.10 மணிக்கு புறப்படும் இந்த ரயில் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக மதியம் 1.50 மணிக்கு எர்ணாகுளம் சென்றடைகிறது. மறுமார்க்கமாக, எர்ணாகுளத்தில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு பெங்களூர் சென்றடைகிறது. இதில் பெங்களுரின் முக்கிய பகுதிகளில் ஒன்றான கிருஷ்ணராஜபுரத்திற்கு 10.23க்கு சென்றுவிடும். இந்த ரயில் கோவையில் இருந்து 5.20க்கு புறப்படுகிறது. திருப்பூரில் 6.03க்கும், ஈரோட்டில் இருந்து 6.45க்கும், சேலத்தில் இருந்து 7.18க்கும் புறப்படுகிறது இரவு 10.23க்கு பெங்களூரின் கிருஷ்ணராஜபுரத்திற்கு போய்விடுகிறது.
வெறும் 5 மணி நேரம் தான்
அதன்பிறகு பெங்களூரின் மெயின் ஸ்டேசனுக்கு செல்ல 11மணி ஆகிறது. எனவே வெறும் 5 மணி நேரத்தில் கோவையில் இருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ரயிலில் போக முடியும் என்பதால் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். திருப்பூரில் இருந்து வெறும் 4மணி நேரம் 20 நிமிடத்தில் போய்விடுகிறது. இதனால் வரவேற்பு அதிகமாக உள்ளது.
பெங்களூர் டூ கோவை
மறுமார்க்கமாக பார்த்தால், காலை 5.10க்கு பெங்களூரில் இருந்து புறப்படும் ரயில் கிருஷ்ணராஜபுரத்திற்கு 5.23க்கு வருகிறது. அங்கிருந்து காலை 8.13க்கு எல்லாம் சேலம் வந்துவிடும். அதன்பிறகு ஈரோட்டிற்கு 9மணிக்கும். திருப்பூருக்கு 9.45 மணிக்கும். கோவைக்கு 10.33க்கும் போகிறது. அதன்பிறகு பாலக்காடு, திருச்சூரில் நின்று மதியம் 1.50க்கு எர்ணாகுளம் போகிறது. இந்த ரயிலில் கோவையில் இருந்து எர்ணாகுளத்திற்கு வெறும் 3மணி நேரத்தில் போய்விட முடியும்.
காத்திருப்பு பட்டியல்
இந்த புதிய ரயில் சேவை திங்கள்கிழமையான நேற்று முதல் வழக்கம்போல் இயங்க தொடங்கியது. இந்த வந்தே பாரத் ரயிலில் முன்பதிவு செய்து மட்டுமே பயணிக்கு முடியும். அதன்படி எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு வரும், இந்த ரயிலில் கோவையில் இருந்து பெங்களூரு செல்ல இந்த மாதம் 30-ந் தேதி வரை பெரும்பாலும் காத்திருப்போர் பட்டியல் தான் இருக்கிறது. மேலும் எர்ணாகுளத்தில் இருந்தும் இந்த மாதம் முழுவதும் பெரும்பாலான நாட்கள் காத்திருப்போர் பட்டியலே காணப்படுகிறது. இதனை பார்க்கும் போது, எர்ணாகுளம் பெங்களூர் வந்தே பாரத் ரயிலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது தெரிகிறது. ஏற்கனவே சென்னை கோவை வந்தே பாரத் ரயிலுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications