பார் நாகராஜனிடம் சிபிசிஐடி கிடுக்கிப் பிடி விசாரணை.. ஏதாவது உண்மையை கக்குவாரா
சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு நேரில் பார் நாகராஜ் ஆஜராகினார்.
கோவை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் பார் நாகராஜன் சிபிசிஐடி விசாரணைக்கு இன்று நேரில் ஆஜரானார்.
பொள்ளாச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரி மாணவிகள், இளம் பெண்கள் என நூற்றுக்கணக்கானோரை ஏமாற்றி, காதல் வலை வீசி.. அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து, அதனை வீடியோவாக எடுத்து மிரட்டிய சம்பவத்தை கேள்விப்பட்டு தமிழகமே ஆடிப்போனது.
கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக பெண்களை நாசமாக்கிய அந்த கும்பலிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் வசந்த் குமார், சதீஷ், சபரீசன், திருநாவுக்கரசு ஆகிய முக்கிய குற்றவாளிகள் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மணிமாறன்
அந்த விசாரணையின்போது பார் நாகராஜ், கோவை புறநகர் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் மகன் மணிமாறன் ஆகிய 2 பேருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக அவர்கள் தகவல் அளித்திருந்தனர்.

நேரில் ஆஜர்
அதன் அடிப்படையில், சிபிசிஐடி போலீசார் பார் நாகராஜ், மணிமாறன் இரண்டு பேருக்கும் நேற்று சம்மன் அனுப்பியிருந்ததுடன், நாளைக்குள் அதாவது 28-ம்தேதிக்குள் கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகுமாறும் சொல்லி இருந்தனர்.

விசாரணை
ஏற்கனவே ஜாமீனில் வெளியே உள்ள பார் நாகராஜ், தனக்கும் இந்த வழக்குக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்று தெரிவித்து வருகிறார். சில சமயம் இதுகுறித்து விளக்கமளித்து வீடியோவும் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில், இன்று சிபிசிஐடி போலீசார் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார் பார் நாகராஜ்! இந்த வழக்கு சம்பந்தமான கேள்விகளை போலீசார் நாகராஜிடம் கேட்டதாக தெரிகிறது!

திருநாவுக்கரசு
பார் நாகராஜனிடம் என்னதான் விசாரணை நடத்தினாலும் உண்மை வருமா என்று தெரியவில்லை. காரணம் அவர் மீதுதான் மக்கள் அதிக அளவில் புகார்களைக் கூறி வருகின்றனர். ஆனால் இதுவரை அவரை முறைப்படி கைது செய்து திருநாவுக்கரசு போல விசாரணை எதுவும் நடத்தியது போலத் தெரியவில்லை. இந்த நிலையில் தற்போது மட்டும் அவர் உண்மையை சொல்லி விடுவாரா என்ற கேள்வியும் தானாகவே எழுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications