பலாத்கார வழக்கு போடுங்க.. பார் நாகராஜ் மது பான பாரை அடித்து நொறுக்கி மக்கள் ஆவேசம்
நாகராஜ் மீது வழக்கு பதிய வேண்டும் என கோரி பொதுமக்கள அவரது பாரை அடித்து நொறுக்கினர்.
Recommended Video

கோவை: "பார் நாகராஜ் மீது ஏன் இன்னும் கேஸ் போடல... உடனடியாக பலாத்கார வழக்கு போடுங்கள்.." என்று கோஷமிட்டு பொதுமக்கள் நாகராஜின் பாரை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பொள்ளாச்சி நகராட்சி 34-வது வார்டு அதிமுக அம்மா பேரவை செயலாளராக பதவி வகித்தவர் பார் நாகராஜ். டாஸ்மாக் பாரை குத்தகைக்கு எடுத்து நடத்தியதால் இவருக்கு பார் நாகராஜ் என்ற பெயர் வந்தது.
நூற்றுக்கணக்கான பெண்களின் கற்பை சூறையாடிய முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசின் நண்பர்தான் இவர். கடந்த 27-ந்தேதி திருநாவுக்கரசால் பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரரை தாக்கிய வழக்கில் இவர் கைது செய்யப்பட்டார். ஆனால் மறுநாளே வெளிவந்துவிட்டார்.

ஆத்திரம்
இந்த பொள்ளாச்சி சம்பவம் அப்படியே அதிமுக பக்கம் கோபமாக மக்களுக்கு திரும்பியது. கட்சியை காரணம் காட்டி எதிர்க்கட்சிகளும் கண்டனங்களும், வசை சொற்களும் அள்ளி வீசின. நிலைமை சீரியஸாக போய்விட்டதை அறிந்த இபிஎஸ்- ஓபிஎஸ் இவரை தலைமை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்கிவிட்டனர். இது பொதுமக்களுக்கு மேலும் ஆத்திரத்தைதான் ஏற்படுத்தியது.

விசாரணை இல்லை
பார் நாகராஜ்-க்கு மேலும் சில அதிமுக முக்கிய புள்ளிகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இப்படி கட்சி அதிரடி நீக்கம் செய்துவிட்டதால், அது சம்பந்தமான விசாரணையே நடக்காமல் போய்விட்டது. அதன் பின்னணியில் உள்ளவர்களும் வெளியே தெரியாமல் போய்விட்டனர்.

பொதுமக்கள் சூறை
கைதாகி சென்றவரும் மறுநாளே வெளிவந்துவிட்டார். இவ்வளவு செய்தும் இப்போதுவரை நாகராஜ் மீது ஒரு கேஸ்கூட போடவில்லை. இதன் உச்சக்கட்ட வெளிப்பாடாகதான், பொள்ளாச்சியில் உள்ள பார் நாகராஜின் பாரை பொதுமக்கள் சூறையாடிவிட்டனர்.

ஜெயலலிதா படம்
சூலேஸ்வரன்பட்டியில்தான் நாகராஜ் பார் நடத்தி வருகிறார். இந்த பாருக்குள் ஜெயலலிதா படம் போட்ட காலண்டர் கம்பீரமாக காணப்பட்டது. இன்று காலை கடைக்குள் திமுதிமுவன பொதுமக்கள் நுழைந்தனர். குடித்து் கொண்டிருந்தர்களை வெளியே போகச் சொல்லியபடி கடைக்குள் புகுந்து அடித்து உடைக்கின்றனர். அடுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை எடுத்து உடைத்து தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.

நொறுக்குகிறார்கள்
அதில் ஒருவர் ஃபிரிட்ஜை திறந்து அதற்குள் இருக்கும் பாட்டில்களை கீழே போட்டு நொறுக்குகிறார். அங்கு போடப்பட்டிருந்த சேர், டேபிள்கள் எல்லாம் உடைந்தும், தாறுமாறாக விழுந்தும் கிடக்கின்றன.

பலாத்கார வழக்கு
உடனடியாக நாகராஜ் மீது பலாத்கார வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் ஆவேசத்துடன் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று நிலைமையை கட்டுப்படுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications