அடிதடி வழக்கில் சிக்கினார் பொள்ளாச்சி "பார்" நாகராஜன்.. கைது செய்து தூக்கியது போலீஸ்!
Recommended Video
கோவை: பொள்ளாச்சியில் அடிதடி வழக்கு ஒன்றில் பார் நாகராஜன் கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சியில் இளம்பெண்களை காதல் வலையில் விழவைத்து தனிமையான இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோவாக எடுத்து அதை வைத்து மிரட்டி மீண்டும் மீண்டும் அந்த பெண்களை பணியவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் புகார் அளித்தார். அதன்பேரில் திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜாமீனில்
இந்த நிலையில் புகார் கொடுத்தது தொடர்பாக பெண்ணின் அண்ணனை தாக்கியதாக அதிமுக பிரமுகர் பார் நாகராஜனின் பெயர் அடிப்பட்டது. இவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

பார் நாகராஜன்
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேலும் சில ஆடியோக்கள் வெளியாகியிருந்தன. அதில் பார் நாகராஜன் ஒரு பெண்ணை மிரட்டுவது போல் இருந்தது. ஏதோ ஒரு கேஸை வாபஸ் வாங்கு என பார் நாகராஜன் மிரட்டுவது போல் இருந்தது.

பெண் மறுப்பு
அதற்கு அந்த பெண் மறுத்த போது உன் கணவரையும் குடும்பத்தையும் தூக்கிவிடுவேன் என பார் நாகராஜன் கொலை மிரட்டல் விடுப்பது போன்று ஆடியோ காட்சிகள் இருந்தன. கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் இவர் நிச்சயம் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

பொள்ளாச்சி நாகராஜன் கைது
இந்த நிலையில் பொள்ளாச்சி ஜோதி நகரில் இரு தரப்பினரிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து பார் நாகராஜன் உள்பட 14 பேரை கைது செய்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications