நாகராஜ் சார்.. உங்க மேல தப்பு இல்லேன்னா ஏன் கட்சி உங்களை நீக்கியது?
அதிமுகவிலிருந்து பார் நாகராஜ் நீக்கப்பட என்ன காரணமாக இருக்கும் என கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video

கோவை: "நாகராஜ் சார்.. உங்க மேல தப்பு இல்லேன்னா ஏன் கட்சி உங்களை நீக்கியது" என்றுதான் கேட்க தோன்றுகிறது.
பொள்ளாச்சி விவகாரம் காட்டுத்தீயாய் பரவி விஸ்வரூபம் எடுத்துவிட்டது. இந்த விவகாரத்தில் பார் நாகராஜ் சம்பந்தப்படவும், அதிமுக மீது எல்லா கோபமும் திரும்பியது. வெறும் அதிமுக என்றாலாவது பரவாயில்லையே... இதில் கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத தமிழிசையையும் சேர்த்தே சங்கடப்படுத்தி விட்டனர்.
எலக்ஷன் நேரம் என்பதாலும், இதனால் தங்கள் கட்சிக்கு எந்தவித பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்பதாலும் அதிமுக தலைமை உடனடியாக பார் நாகராஜை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டது. சந்தோஷம்!

மக்கள் ஆவேசம்
ஆனால் அதிமுக பிரமுகர்களுடன் பார் நாகராஜ்க்கு தொடர்பு இருக்கிறது என்ற தகவல் வெளிப்பட்டும் அது சம்பந்தமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் போய்விட்டது. அவசர அவசரமாக அவரை நீக்கம் செய்ததால், விசாரணையும் இல்லை. இதுதான் மக்களுக்கு நேற்று கொந்தளிப்பை ஏற்படுத்தி அவரது பாரையும் அடித்து நொறுக்கும் அளவுக்கு போய்விட்டது.

விளக்கம்
இப்போது, வெளியான வீடியோவில் இருப்பது தாம் அல்ல என கோவை ஆட்சியரிடம் மனு அளித்திருக்கிறார் நாகராஜ். போலீஸ் அறிவுறுத்தியதால் சொந்த கிராமத்தில் இருக்கிறாராம். அதிமுகவில் இருப்பதால் தம் மீது குற்றம் சுமத்தப்படுகிறது என்றும் கட்சித் தலைவர்களுடன் மட்டுமே தமக்கு பழக்கம் உள்ளது என்றும் தன்னிலை விளக்கம் சொல்கிறார்.

கட்சி அலுவலகம்
அப்படியானால், கட்சி தலைமை ஏன் நாகராஜை நீக்கியது? இது குறித்து கட்சி தலைமையிடம் நாகராஜ் இதுவரை ஏதாவது கேள்வி கேட்டாரா? தன் மீது குற்றமே இல்லாதவர், "அது எப்படி என்னை நீக்கலாம்? நான் என்ன தப்பு செய்தேன்" என்று அல்லவா இந்நேரம் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். கலெக்டர் ஆபீஸ் போய் மனு கொடுத்தவர், கட்சி ஆபீஸ் பக்கம் ஏன் இது சம்பந்தமாக விளக்கமோ, கேள்வியோ எழுப்பவில்லை என தெரியவில்லை.

ஏன் நீக்கியது
நாகராஜ் எந்த தப்பும் செய்யவில்லை என்றே வைத்து கொள்வோம், பிறகு அவரை ஏன் கட்சி தலைமை நீக்கியது? எதை ஆதாரமாக வைத்து கட்சி தலைமை இந்த முடிவை அறிவித்தது? வெறும் குற்றம் சுமத்தப்படுவதாலேயே தலைமை ஒருவரை நீக்கிவிடுமா என்ன?

அறிவுறுத்தல்
வழக்கு பதிய வேண்டும் என்று மக்கள் அங்கு கொதித்து போய் டாஸ்மாக் பாரை உடைத்தால், சொந்த கிராமத்தில் இருக்கும்படி போலீஸ் அறிவுறுத்துவதும் ஏனோ? எந்தக் கேள்விக்குமே பதில் இல்லை.
-
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications