போகி பண்டிகை.. கோயம்புத்தூர் மக்களே.. ஜனவரி 10,11,12 மற்றும் 13ம் தேதி மிகப்பெரிய சிறப்பு முகாம்
கோவை: வரும் ஜனவரி 14ம் தேதி போகி பண்டிகை தமிழ்நாட்டில் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. பழைய கழிதலும், புதியன புகுதலும் என்ற பழமொழியை பெய்பிக்கும் நாள் ஆகும். இந்த நாளில் பலர் பழைய பொருட்களை குப்பைகளை வீசுவார்கள். பலர் தீயிட்டு கொளுத்துவார்கள். மொத்தமாக குப்பையில் போடும் போது பெரிய மாசு ஏற்படும். எனவே அவற்றை வீட்டிற்கே வந்து வாங்க கோவை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக கோயம்புத்தூர் மாநகராட்சி சார்பில் பெரிய அளவிலான வீட்டு கழிவுப்பொருட்கள் சேகரிப்பு சிறப்பு முகாம்கள் - ஜனவரி 10,11,12 மற்றும் 13, 2026 ஆகிய தேதிகளில் நடைபெற போகிறது.
போகிப் பண்டிகை என்பது தமிழர்களின் அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையின் முதல் நாள் கொண்டாடப்படுவது வழக்கம். "பழையன கழிதலும், புதியன புகுதலும்" என்ற அடிப்படையில் ஜனவரி 14ம் தேதி அதாவது பொங்கலுக்கு முதல் நாள் (மார்கழியின் கடைசி நாள்) கொண்டாடுவார்கள். போகி பண்டிகையின் போது, ல், வீட்டில் உள்ள பழைய மற்றும் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்துவார்கள். இது வெறும் பொருட்களைத் தூக்கி எறிவது மட்டுமல்ல; நம்மிடம் உள்ள எதிர்மறை எண்ணங்கள், தீய பழக்கங்கள் மற்றும் பழைய கசப்பான நினைவுகளை நீக்கி, புதிய தொடக்கத்தை (பொங்கல்) வரவேற்பார்கள்.

பண்டைய காலத்தில் போகிப் பண்டிகை 'இந்திர விழா' என்று அழைக்கப்பட்டது. மழையையும் செல்வத்தையும் தரும் கடவுளான இந்திரனுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த விழா கொண்டாடப்பட்டது. உழவுத் தொழிலுக்கு மழையே பிரதானம் என்பதால், விவசாயிகள் இந்த நாளை முக்கியமாகக் கருதி கொண்டாடுகிறார்கள்.
பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாக, வீட்டின் நிலைக் கதவுகளுக்கு காப்புக்கட்டுதல் எனும் முறை பின்பற்றுவார்கள். இதில் வேப்பிலை, ஆவாரம்பூ மற்றும் சிறுபீளை (பூளைப்பூ) ஆகியவற்றைச் சேர்த்து ஒரு கொத்தாகக் கட்டி வீட்டின் கூரை அல்லது வாசலில் சொருகுவார்கள். இது கிருமிநாசினியாகவும், வீட்டிற்குப் பாதுகாப்பு தரும் குறியீடாகவும் மக்கள் நம்புகிறார்கள். இந்த விழாவையொட்டி ஒரே நேரத்தில் பலர் பழைய பொருட்களை அகற்றுவார்கள். எனவே கோயம்புத்தூர் மாநகராட்சி சார்பில் பெரிய அளவிலான வீட்டு கழிவுப்பொருட்கள் சேகரிப்பு சிறப்பு முகாம்கள் - ஜனவரி 10,11,12 மற்றும் 13, 2026 ஆகிய தேதிகளில் நடத்த முடிவு செய்துள்ளது.
கோயம்புத்தூர் மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "கோயம்புத்தூர் மாநகராட்சி நிர்வாகம், பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் பழைய படுக்கைகள், சோபாக்கள், மெத்தைகள், மேஜை, நாற்காலிகள் மற்றும் பிற பெரிய வீட்டு கழிவுப்பொருட்கள் ஆகியவற்றை முறையாக அகற்ற, வருகின்ற, ஜனவரி 10,11,12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் சிறப்பு சேகரிப்பு முகாமை நடைபெற உள்ளது.
இந்த நான்கு தினங்களிலும், மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து மேற்கண்ட பெரிய அளவிலான கழிவுப்பொருட்களை வார்டு வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள சேகரிப்பு இடங்களுக்கு கொண்டு வந்து ஒப்படைக்கலாம். அத்துடன், மக்கள் இவ்வகை கழிவுகளை தெருவோரம், சாலைகளில் அல்லது காலி இடங்களில் விட்டுவிடாமல், இந்த சிறப்பு முகாமைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், வார்டு அலுவலகங்கள் மற்றும் மண்டல அலுவலகங்கள் சேகரிப்பு மையங்களாக செயல்படும். மேலும் விவரங்களுக்கு தங்கள் வார்டு சுகாதார மேற்பார்வையாளரை தொடர்பு கொள்ளலாம். கழிவுகளை முறையாக நிர்வகித்து, சுத்தமான கோயம்புத்தூரை உருவாக்கும் இம்முயற்சிக்கு பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு கீழ்க்கண்ட மண்டல உதவி எண்களில் தொடர்பு கொள்ளவும்: 1.வடக்கு மண்டலம் (North Zone): 89259 75980, 2.மேற்கு மண்டலம் (West Zone): 8925975981, 3.மத்திய மண்டலம் (Central Zone): 89259 75982, 4.தெற்கு மண்டலம் (South Zone):
90430 66114, 5.கிழக்கு மண்டலம் (East Zone): 89258 40945. இணையதளம்: www.ccmc.gov.in மேற்கண்ட தகவலை கோயம்புத்தூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications