இளையராஜாவின் இசையே அருமருந்து.. இசைஞானியை சந்தித்தது என் வாழ்நாள் பாக்கியம்.. நெகிழும் அண்ணாமலை!
கோவை: வருங்கால தலைமுறைக்கும் இளையராஜாவின் இசையே அருமருந்தாக இருக்க போகிறது என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் இசைஞானி இசையின் துணை கொண்டே கடக்கிறோம் என்று கூறிய அவர், இளையராஜாவை நேரில் சந்திக்கும் வாய்ப்பை பெற்றது மிகப்பெரிய பாக்கியம் என்றும் கூறியுள்ளார்.
கோவையில் இசைஞானி இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இதற்காக கோவை வந்துள்ள இளையராஜா, தனியார் நட்சத்திர ஹோட்டலில் விளம்பரதாரர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவருக்கு ரோட்டரி கிளப் சார்பாக சிறப்பு விருது அளிக்கப்பட்டது.

அப்போது இளையராஜா பேசுகையில், நான் பேச்சாளர் அல்ல.. பாட்டாளி.. பாட்டாளி என்பவன் பாடுபவன், பாடுபடுபவன், வேலை செய்பவன். என் பாடு வேறு, பாட்டாளிகள் அவங்க பாடு வேறு. என் பாடு பாட்டாகின்றது. கோவையில் என் காலடி படாத இடமே கிடையாது. இங்கு ஆர்மோனியம் வாசிக்காத இடங்கள் இல்லை. இந்த ஆர்மோனியம் கூட கோவையில் செய்ததுதான்.
என் அண்ணன் இங்கேதான் ஒருவரிடம் ஆர்மோனியம் வாங்கினார். ஒப்போது வரை என்னிடம் அந்த ஆர்மோனியம் இருக்கிறது. அதனையே பயன்படுத்தி வருகிறேன். கோவைக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு என்று சொல்ல கூடாது. ஏனென்றால் கோவையை நான் பிரிவதே கிடையாது என்று தெரிவித்தார். இந்த சூழலில் கோவையில் இருக்கும் இளையராஜாவை பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை சந்தித்தார்.
மரியாதை நிமித்தமாக நடந்த சந்திப்பில், இசைஞானி இளையராஜாவை சந்தித்து அண்ணாமலை நெகிழ்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், கோவையில், நமது இசைஞானி, பத்மவிபூஷண் இளையராஜாவை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.
நம் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும், இசைஞானி அவர்களின் இசையின் துணை கொண்டே கடக்கிறோம். நமது வருங்கால தலைமுறைகளுக்கும், அவரது இசையே அருமருந்தாக இருக்கப் போகிறது என்பதை விட, மகிழ்ச்சி தருவது வேறென்ன இருந்து விடப் போகிறது என்று பதிவிட்டுள்ளார். மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின், அண்ணாமலை குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட்டு வருகிறார். இன்று மதுரைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் நிலையில், கோவையில் அண்ணாமலை இளையராஜாவை சந்தித்திருக்கிறார்.
-
3 மாதத்திற்குள் கட்சி லான்ச் ஆகும்.. பை-லாவை தயார் செய்யும் அண்ணாமலை.. மிகப்பெரிய முடிவு -
சலசலப்புகளுக்கு இனி இடமில்லை.. அமித்ஷாவை சந்தித்த தமிழக பாஜக உயர்மட்டக்குழு.. அடுத்தது என்ன? -
"மாற்றத்தை விரும்பும் மக்கள் ஒன்னா சேருவோம்" மக்கள் மேடை இயக்கம் குறித்து லதா ரஜினிகாந்த் விளக்கம்! -
அதே டெய்லர்.. அதே வாடகை.. மரு மட்டும் ஒட்டிக்கொண்டு வந்த ஏமாற்று வேலை! விஜய் மீது அண்ணாமலை அட்டாக் -
60,370 வேட்பாளர்கள்.. சக்ரவியூகம்.. அடித்து தூக்கிய அண்ணாமலை.. இதெல்லாம் எதிர்பார்க்காத வேகம் -
அண்ணாமலையுடன் இணையும் மாஜி டிஜிபி.. சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஏகே விஸ்வநாதன் யார்? -
அடிச்சு ஆடும் அண்ணாமலை! 3 கட்சிகளுக்கும் ஒரே நேரத்தில் செக்! உள்ளாட்சி தேர்தலுக்கு பக்கா ப்ளான்! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
திடீர் ட்விஸ்ட்.. அண்ணாமலையுடன் கைகோர்க்க போகும் ராகவா லாரன்ஸ்? நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்?












Click it and Unblock the Notifications