கோவை காந்திபுரத்தை அதிர வைத்த ரவுடியிசம்.. அண்ணாமலை சொல்லும் காரணம் இதுதான்!
கோவை: கோவையில் பெண் வன்கொடுமை வழக்கில் ஆஜரானவர்கள் சரமாரியாக தாக்கப்பட்ட வீடியோவை வெளியிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அந்த விவகாரம் தொடர்பாக தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட பதிவில், "கோவையில், பெண் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நீதிமன்ற வழக்கு விசாரணை ஒன்றில் பங்கெடுத்துவிட்டு வெளியில் வந்த குற்றவாளிகள் மூன்று பேரை, இரு சக்கர வாகனங்களில் ஒன்பது பேர் கொண்ட கும்பல் துரத்திச் சென்று சரமாரியாக வெட்டியிருக்கிறார்கள் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

நீதிமன்ற வளாகத்திலிருந்தே பின்தொடர்ந்த கும்பல், அவர்களைத் துரத்திச் சென்று, பொதுமக்கள் முன்னிலையில் குடியிருப்புப் பகுதியில் வைத்து, மூவரையும் வெட்டியிருப்பது, சட்டம் ஒழுங்கைக் கேள்விக்குரியதாக்கியிருக்கிறது.
பட்டப் பகலில், நீதிமன்ற வளாகத்திலிருந்தே பயங்கரமான ஆயுதங்களுடன் குற்றவாளிகள் சுதந்திரமாக உலா வரும் அதே கோவையில் இன்று, கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர்கள், மாநகர காவல் ஆணையாளர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மேற்கு மண்டல காவல் துறை தலைவர் என காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ள தமிழ்நாடு காவல் ஆணையத்தின் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது.
கோவையில், பெண் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நீதிமன்ற வழக்கு விசாரணை ஒன்றில் பங்கெடுத்துவிட்டு வெளியில் வந்த குற்றவாளிகள் மூன்று பேரை, இரு சக்கர வாகனங்களில் ஒன்பது பேர் கொண்ட கும்பல் துரத்திச் சென்று சரமாரியாக வெட்டியிருக்கிறார்கள் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
— K.Annamalai (@annamalai_k) September 12, 2023
நீதிமன்ற… pic.twitter.com/cVA9CxywSJ
காவல்துறையின் கைகளைக் கட்டிப் போட்டு, திமுகவினருக்குச் சாதகமான செயல்களைச் செய்யவும், ஆளுங்கட்சியினரின் அரசியல் செயல்பாடுகளுக்கும், எதிர்க்கட்சியினரை மிரட்டப் பயன்படுத்துவதுமான திமுக அரசின் கையாலாகாத செயல்பாடுகளால், தமிழகம் முழுவதும் குற்றச் செயல்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
பொதுமக்கள் உயிருக்குப் பாதுகாப்பில்லாத சூழலை ஏற்படுத்தியிருக்கிறது திமுக. வரும்முன் காப்பது என்பது தமிழக அரசைப் பொறுத்தவரை அறிந்திராத செயல்பாடாகிவிட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது. இனியாவது காவல்துறையை ஆளுங்கட்சியினர் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து, சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றி, மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய திமுக அரசு முயற்சிக்குமா?" இவ்வாறு அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளார்.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications