தலைவரே இருங்க தலைவரே.. நீங்க புலியா? அப்ப புலி மாதிரி தாண்டுங்க! புது விளக்கம் கொடுத்த அண்ணாமலை!

Subscribe to Oneindia Tamil

கோவை: மன்னிப்பு கேட்கும் பழக்கம் தனது ரத்தத்திலேயே இல்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கடலூரில் பத்திரிகையாளர்களை குரங்கு என்று தாம் நேரடியாக விமர்சிக்கவில்லை என்றும் குரங்கு மாதிரி ஏன் தாவுகிறீர்கள் என்று உவமையை தான் கூறியதாகவும் தெரிவித்தார்.

மேலும், அனைத்து பத்திரிகையாளர்களை பார்த்தும் தாம் இப்படி கூறவில்லை என்றும் குறிப்பிட்ட செய்தியாளர் தனி அஜெண்டாவோடு தன்னிடம் திருப்பித் திருப்பிக் கேள்விகள் கேட்டதாகவும் கூறினார்.

கோவையில் அண்ணாமலை

கோவையில் அண்ணாமலை

கோவையில் கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு சென்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அங்கு ஒரு கையில் எலுமிச்சை பழத்தையும் மற்றொரு கையில் புத்தகத்தையும் வைத்துக்கொண்டு கந்தசஷ்டி கவசம் பாடினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், பத்திரிகையாளர்களை குரங்கு என விமர்சித்தது பற்றி கேள்விகள் முன் வைக்கப்பட்டன. அதற்கு பதிலளித்த அண்ணாமலை, ஒருவர் புலி மாதிரி கேள்வி கேட்கிறார் என்று கூறுவதால் அவர் புலியாகிவிடுவாரா என பதில் கேள்வி எழுப்பினார்.

மன்னிப்பு கேட்க முடியாது

மன்னிப்பு கேட்க முடியாது

இதைப் போல் தான் கடலூர் நிகழ்வும் எனச் சுட்டிக்காட்டியாவர், பத்திரிகையாளர்களை குரங்கு என்று எந்த இடத்திலும் தாம் கூறவில்லை என்றும் குரங்கு மாதிரி ஏன் அங்கும் இங்கும் தாவி தாவி கேட்கிறீர்கள் என்று உவமையை கூறியதாகவும் புதிய விளக்கம் கொடுத்தார். ஆனாலும் அசராத கோவை செய்தியாளர்கள், கடலூர் நிகழ்வுக்கு மன்னிப்பு கேட்பீர்களா என அடுத்த கேள்வியை வீசினர். இதனால் சூடான அண்ணாமலை, தாம் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும், மன்னிப்பு கேட்கும் பழக்கம் தனது ரத்தத்திலேயே இல்லை என மிகத் திட்டவட்டமாக தெரிவித்தார்.

பிடித்தால் வாங்க

பிடித்தால் வாங்க

மேலும், தனது பிரஸ்மீட்டிற்கு வர வேண்டும் என விருப்பமுள்ள செய்தியாளர்கள் மட்டும் வந்தால் போதும் என்றும் தனிப்பட்ட அஜெண்டாவோடு வந்து பிரச்சனை செய்யத் தேவையில்லை எனவும் கூறினார். இதனால் மீண்டும் செய்தியாளர்கள் அண்ணாமலை இடையே காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றது. தன்னைப் போல் பத்திரிகையாளர்களுக்கு வேறு எந்த தலைவரும் மரியாதை கொடுத்தது கிடையாது எனவும் தெரிவித்தார்.

இருங்க தலைவரே

இருங்க தலைவரே

இதனிடையே கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, செய்தியாளர்களை பார்த்து ''தலைவரே.. தலைவரே.. இருங்க தலைவரே'' எனப் பேசி அவர்களை கூல் செய்யவும் அண்ணாமலை முயற்சித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+