திருமாவளவன் எந்த மதத்தை சேர்ந்தவர்?.. "மேட் இன் தமிழ்நாடு" எதுக்கு?.. வேலூர் இப்ராஹிம் குற்றச்சாட்டு
திருமாவளவன் மீது வேலூர் இப்ராஹிம் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்
கோவை: "விசிக தலைவர் எந்த மதத்தை சேர்ந்தவர் என்பதை அக்கட்சியில் உள்ளவர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.. பாஜக என்பது அனைவருக்குமான கட்சி... பாஜக இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிரான கட்சி என்ற பொய் பிரச்சாரத்தை திமுகவும் கூட்டணி கட்சிகளும் +செய்து வருகின்றன" என்று வேலூர் இப்ராஹிம் குற்றஞ்சாட்டி உள்ளார்.
பெற்றோரை இழந்த இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகளின் வாழ்நாள் கல்வி செலவை ஏற்கும் நிகழ்ச்சியானது, கோவை பாஜக அலுவலகத்தில் நடந்தது.
இதில் பாஜக சிறுபான்மையினர் அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்கினார்... கோவை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் நந்தகுமார், பொதுச்செயலாளர் ரமேஷ் உட்பட கட்சியினர் பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பேட்டி
பின்னர் வேலூர் இப்ராஹிம் செய்தியாளர்களிடம் சொன்னதாவது: "நாங்கள் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிரான கட்சி என்று திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன... ஆனால் நாங்கள் அப்படி இல்லை.. தொடர்ந்து அந்த மக்களுக்கு நாங்கள் உதவிகளை செய்து கொண்டுதான் இருக்கிறோம்.. இஸ்லாமிய, கிறிஸ்தவ, ஏழை மாணவர்கள் கல்லூரி மற்றும் பள்ளிகளில் சேர்வதற்கான தொடர் நடவடிக்கைகளையும் எடுத்து கொண்டு வருகிறோம்.

பிரிவினைவாதம்
தேசத்துக்கு எதிரான பிரிவினைவாத, தீவிரவாத சக்திகளை யார் ஊக்குவித்தாலும் பாஜக அதை நெஞ்சுரத்தோடு எதிர்க்கும்.. பாஜக அனைவருக்குமான கட்சி.. தமிழகத்தில் மதுபான கடைகள், மால்கள், தியேட்டர்கள் உள்ளிட்ட கூட்டம் மிகுந்த இடங்கள் திறக்கப்பட்டுள்ளன.. இதெல்லாம் நெருக்கடி மிகுந்த இடங்கள்.. அவை திறக்கப்பட்டுள்ளன.. இங்கு பரவாத கொரோனா, குளித்து தூய்மையாகி கடவுளை வணங்கச் செல்லும் கோயில்களில் பரவும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

விசிக திருமாவளவன்
திமுக என்ற இந்து விரோத அரசு செய்கிறது. எங்கள் மாநில தலைவர் அண்ணாமலை 10 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார். அதற்குள் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ளாவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம். எங்கு சென்றாலும் விசிக தொண்டர்கள் எனக்கு எதிராக போராடி வன்முறையை தூண்டுகின்றனர்.. விசிக தலைவர் எந்த மதத்தை சேர்ந்தவர் என்பதை அக்கட்சியில் உள்ளவர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

உள்ளாடசி தேர்தல்
இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் காக்க வந்தவர் போல் வந்து, அவர்களை ரவுடிகளாக மாற்ற முயற்சி செய்கிறார்.. வெளி மாநிலங்களில் இருந்து பருப்பு உட்பட பல பொருட்கள் தமிழகத்திற்கு வருகின்றன. பிறகு எப்படி மேட் இன் தமிழ்நாடு செல்லுபடியாகும்? இது பிரிவினை வாதத்தை தூண்டும் வகையில் உள்ளது. திமுக ஆட்சி நடைபெறும்போது காவல் துறையை கையில் வைத்துக் கொண்டு உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடித்துள்ளது... அதன் முடிவுகளே தற்போது வெளியாகியுள்ளன.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம்












Click it and Unblock the Notifications