இப்பவே பண்ணிக்கோ.. ஒத்தை காலில் நின்ற காதலன்.. மறுத்த காதலி.. சாணி பவுடரை வாயில் ஊற்றி.. கொடுமை!

காதலியின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டார் இளைஞர்

Subscribe to Oneindia Tamil

கோவை: இப்பவே கல்யாணம் பண்ணிக்கோ என்று ஒத்தை காலில் நின்றார் காதலன்.. அதற்கு காதலி மறுப்பு தெரிவிக்கவும், கயிற்றால் கழுத்தை நெரித்து.. வாயில் சாணி பவுடரை ஊற்றி கொன்றுவிட்டார்!

கோவை கீரணத்தம் அருகே உள்ள கல்லுக்குழியை சேர்ந்த தம்பதி முருகன் - ராமாத்தாள். இவர்களது மகள் நந்தினி.. 21 வயதாகிறது.. கோவை அரசு கலைக்கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் கடைசி வருடம் படித்து வந்தார்.

இவரது பள்ளி தோழர் தினேஷ்.. அலங்கார பொருட்கள் செய்யும் தொழில் செய்து வருகிறார்... இவருக்கும் வயது 21தான்.. ஸ்கூல் படிக்கும்போதிருந்தே காதலித்து வந்துள்ளனர்.

கல்யாணம்

கல்யாணம்

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக தினேஷ் தன்னை கல்யாணம் செய்து கொள்ளும்படி நந்தினியிடம் சொல்லவும், நந்தினியும் அதை தன் பெற்றோரிடம் கூறினார். பிறகு இரு வீட்டினரும் பேசி சம்மதம் சொன்னார்கள்.. நந்தினியின் படிப்பு முடிந்தவுடன் கல்யாணத்தை வைத்து கொள்ளலாம் என்றார்கள்.. நந்தினியும் வழக்கம்போல காலேஜ்க்கு சென்று வந்தார்.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

ஆனால் நாட்களுக்கு முன் நந்தினியை சந்தித்த தினேஷ், இப்பவே கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.. இதற்கு நந்தினி எந்த பதிலும் சொல்லாமல் இருக்கவும், அவர் எங்கு செல்கிறாரோ, பின்னாடியே போய் கல்யாண பேச்சை எடுத்துள்ளார் தினேஷ்.. இப்படி தொல்லை செய்து வந்ததால் தினேஷிடம் பேசுவதை நந்தினி குறைத்து கொண்டார்.

கல்யாணம்

கல்யாணம்

இதனால் தினேஷூக்கு இன்னும் கோபம் வந்தது.. நேற்று நந்தினி வீட்டுக்குள் நுழைந்து திரும்பவும் கல்யாண பேச்சை எடுத்தார்.. வீட்டில் யாருமே இல்லை. அதனால் நந்தினி படிப்பு முடியட்டும் என்று சொல்லவும், தகராறு வெடித்துள்ளது.. நந்தினியை சரமாரியாக தினேஷ் தாக்கினார். இதில், நந்தினியின் தலை, வயிறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.. பிறகு வீட்டில் இருந்த கயிறை எடுத்து நந்தினியின் கழுத்தை இறுக்கினார்.

சாணி பவுடர்

சாணி பவுடர்

அப்போதும் ஆத்திரம் அடங்காமல் கொண்டு வந்திருந்த சாணி பவுடரை நந்தினியின் வாயில் ஊற்றிவிட்டு தப்பி விட்டார்.. சிறிது நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த பெற்றோர், நந்தினி மயங்கிய கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று நந்தினி உயிரிழந்தார்.

தற்கொலை முயற்சி

தற்கொலை முயற்சி

இதனால் ஆவேசமடைந்த உறவினர்கள் தினேஷை கைது செய்ய வேண்டும் என்று கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.. கோவில் பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.. இதனிடையே தினேஷை பிடிக்க சென்றால், அவரும் அதே சாணி பவுடரை குடித்து மயங்கி விழுந்துள்ளார்.. அவரையும் மீட்டு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.. இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+