கோவையின் காவல் தெய்வங்கள்..காவல்துறைக்கு அண்ணாமலை பாராட்டு.. சிலிண்டர் வெடிப்பு என்று கூறுவது ஏன்?
கோவை: கோவையில் மிகப்பெரிய சம்பவம் நடைபெறாமல் உயிரை பணயம் வைத்து தடுத்து நிறுத்திய காவல் தெய்வங்களுக்கு மிகப்பெரிய நன்றி என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். அதே நேரத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நிகழ இருந்த சம்பவத்தை வெறும் சிலிண்டர் வெடிப்பு என்று மட்டும் காவல்துறையினர் கூறுவது ஏன் என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை உக்கடம் அருகே கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இந்த வழக்கு என்ஐஏ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கார் வெடிப்பு நிகழ்ந்த கோட்டை ஈஸ்வரன் கோவிலில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை இன்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, கோவை நகரம் 1998 ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டு வெடிப்பிற்கு பிறகு பின்னோக்கி சென்றுள்ளது.

காவல்துறைக்கு பாராட்டு
அக்டோபர் 23ஆம் தேதியன்று இதே போல மீண்டும் ஒரு தாக்குதல் சம்பவம் நிகழ்ந்திருந்தால் கோவை என்னவாகியிருக்கும் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அப்படி ஒரு சம்பவம் நடைபெறாமல் நமது கோவை மாநகர காவல்துறையினர் தடுத்து விட்டனர். கடந்த 10 ஆண்டுகாலமாக கோவை நகரமக்கள் மிகவும் சிரமப்பட்டு முன்னேற்றியிருக்கிறார்கள். இந்த நேரத்தில் வெடி விபத்து தற்கொலை தாக்குதல் நடந்திருந்தால் கோவை மீண்டும் 20 ஆண்டுகள் பின்னோர்க்கி சென்றிருக்கும். அதை தடுத்து நிறுத்திய கோவை நகரத்தின் காவல் தெய்வங்களாக உள்ள காவல்துறையினருக்கு பாராட்டுக்கள்.

காவல்துறைக்கு நன்றி
காவல்துறை நண்பர்கள் விபத்து நடந்த பிறகு மிகத்துணிவோடு இந்த இடத்தை எல்லாம் அப்புறப்படுத்தி, குற்றத்தில் தொடர்புடையவர்களின் வீடுகளுக்கு சென்று அங்கிருந்த பொருட்களை எல்லாம் பறிமுதல் செய்து துணை தாக்குதல் எதுவும் நடைபெறாமல் காத்திருக்கின்றனர். தங்களின் உயிரை பணயம் வைத்து காவல்துறை நண்பர்கள் செயல்பட்டுள்ளனர் அவர்களுக்கு முதற்கண் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இது எத்தனை குண்டு என்று யாருக்குமே தெரியாது. துணிந்து காவல்துறையினர் பணி செய்தனர்.

கோவை மக்கள் ஒற்றுமை
கோவை மக்களை யாராலும் பிளவு படுத்த முடியாது. மதத்தை வைத்து கோவையை சூறையாட நினைக்கின்றனர். இதுபோல ஒரு தற்கொலை படை தாக்குதல்களை நடத்தி மதத்தை வைத்து பிரிக்க நினைக்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது. கோவையில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக இருக்கின்றனர். பாஜகவினர் இதுவரை எந்த மதசாயமும் பூசவில்லை. குற்றவாளிகள் என்றுதான் கூறியிருக்கிறோம்.

வன்முறை
பிரித்து பார்ப்பது சனாதன தர்மத்திற்கு எதிரானது. அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும். கோவையில் எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் வன்முறையை கையில் எடுக்கக் கூடாது வன்முறையை கையில் எடுப்பவர்களுக்கு ஊக்கம் அளிக்கக் கூடாது என்றும் அண்ணாமலை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அண்ணாமலை, கார் வெடித்த இடத்தில் இருந்து ஆணிகள், கோலி குண்டுகளை சேகரித்து சிலர் கொடுத்ததாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பாஜக மீது குற்றம் சாட்டுவதா?
தமிழக அரசுக்கு தொந்தரவு கொடுப்பது பாஜகவின் நோக்கமில்லை. கோவையில் எந்த மதத்தினரும் வன்முறையை கையில் எடுக்கக் கூடாது என்றுதான் சொல்கிறோம். கோவை மக்கள் தெய்வாதீனமாக மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். தேவையில்லாமல் போலீசுக்கு நெருக்கடி கொடுப்பதாக பாஜகவினர் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.

சிலிண்டர் வெடிப்பு
கோவையிலேயே இருந்த ஜமேசா முபினை சரியாக கண்காணிக்க வில்லை. காவல்துறையினர் சிலிண்டர் வெடிப்பு என்றுதான் கூறுகின்றனர் அதை எப்படி எடுத்துக்கொள்வது. சிலிண்டர் வெடிப்பு என்று மட்டும் சொன்னால் மக்கள் முன்ஜாக்கிரதையாக இருக்க மாட்டார்கள். மக்களை எச்சரிக்கை செய்வது காவல்துறையினரின் கடமை என்று கூறினார்.குடி மக்களுக்கு உண்மையை சொல்வதால் யாரும் தவறாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள். அதுதான் எங்களின் நோக்கம். நாங்கள் பயன்படுத்தும் வார்த்தை குற்றவாளிகள் என்றுதான் கூறுகிறோமே தவிர இஸ்லாமிய குற்றவாளிகள் என்று கூறவில்லை. ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினால் முறைச்சலவை செய்யப்பட்டவர்கள் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications