‛ஏதோ கேள்விபட்டேன்’ சித்தார்த் குறித்த கேள்விக்கு மழுப்பிய நடிகை ராதிகா! என்ன இப்படி சொல்றாங்க?
கோவை: காவிரி பிரச்சனைக்கு நடுவே பெங்களூரில் சித்தா திரைப்படத்தின் புரோமேஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சித்தார்த்தை கன்னட அமைப்பினர் பாதியில் வெளியேற்றினர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பிய நிலையில் அதுகுறித்த கேள்விக்கு ராதிகா மழுப்பியபடி பதிலளித்துள்ளார்.
தமிழ்நாடு-கர்நாடகா இடையே காவிரி நீர் பங்கீட்டு கொள்வதில் பிரச்சனை வெடித்துள்ளது. தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க கூடாது என கர்நாடகாவில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. மண்டியா, பெங்களூரில் பந்த் நடத்தப்பட்டது.

அதன்பிறகு கர்நாடகா முழுவதும் பந்த் நடத்தப்பட்டுள்ளது. இதனால் இருமாநிலங்கள் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இதற்கிடையே தான் நடிகர் சித்தார்த் தான் நடித்த ‛சித்தா' திரைப்படம் குறித்த பெங்களூர் புரோமேஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
கன்னட அமைப்பை சேர்ந்தவர்கள் நடிகர் சித்தார்த் நிகழ்ச்சியில் புகுந்து காவிரி விவகாரம் பற்றி பேசி பாதியில் வெளியேற்றினர். இதுதொடர்பான வீடியோ வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கன்னட நடிகர் சிவராஜ் குமார் மற்றும் பிரகாஷ் ராஜ் இந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரியுள்ளனர்.
இந்நிலையில் தான் கோவையில் இன்று நடிகை ராதிகா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் காவிரி விவகாரம் குறித்தும், பெங்களூரில் சித்தார்த்துக்கு நடந்த சம்பவம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது பத்திரிகையாளர் ஒருவர், ‛‛காவிரிவிவகாரத்தில் போராட்டம் நடத்தினால் ஆதரவு என சமுத்திரக்கனி கூறியுள்ளது பற்றி என்ன நினைக்கிறீர்கள்'' என கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு ராதிகா, ‛‛நான் பார்க்கவில்லை'' என்றார். இதையடுத்து ‛‛காவிரி விஷயத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவாக கன்னட நடிகர், நடிகைகள் ஆர்ப்பாட்டம், போராட்டம் செய்துள்ளார்கள். சித்தார்த் கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். சித்தார்த்துக்கு தமிழ்நாட்டில் இருந்து நடிகர், நடிகைகள் யாரும் எந்தவித ஆதரவும் கொடுக்கவில்லை'' என கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து ராதிகா, ‛‛அப்படியா.. எனக்கு கடந்த 3 நாட்களாக உடல்நலம் சரியில்லை. அதோடு விளம்பரம் தொடர்பான பணியில் பிஸியாக இருந்தேன். ஏதோ கேள்விபட்டேன் சித்தார்த் பற்றி. சித்தார்த் பொறுமையாக உட்கார்ந்து கொண்டிருந்தார்'' என்றார். இந்த வேளையில், பத்திரிகையாளர் ‛வெளியே போங்க' என கூறியதாக தெரிவித்தார். அதற்கு ராதிகா, ‛‛தண்ணீர் பிரச்சனை பற்றி பேசினார்கள். வெளியே போங்கள் என சொல்லவில்லை. தண்ணீர் பிரச்சனை பற்றி பேசியதை மட்டும் நான் பார்த்தேன்'' என்றார்.
அதன்பிறகு ‛‛காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழக அரசின் செயல்பாடு எப்படி உள்ளது?'' என வினா எழுப்பப்பட்டது. அதற்கு ராதிகா, ‛‛இதெல்லாம் சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல் மூலம் எப்படி அமல்படுத்துவது என்பது பற்றி அந்தந்த அரசாங்கள் தான் பார்த்து செய்ய வேண்டும்'' என்றார்.
இறுதியாக, ‛‛33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை எப்படி பார்க்கிறீர்கள்'' என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ராதிகா, ‛‛நீண்ட ஆண்டுகளாக இதுபற்றி பேசப்பட்டது. இன்று நாடாளுமன்றத்தில் அதனை நிறைவேற்றி உள்ளனர். ஆனால் அதனை சரியாக செயல்பட வேண்டும்'' என்றார். இதையடுத்து ‛‛2029ல் நடைமுறைக்கு வரும் என சொல்கிறார்களே'' என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, ‛‛குட்.. அம்மி கல்லை கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக தள்ளினால் தான் நகரும் என சொல்வார்கள். அதுபோல் தள்ளிக்கொண்டே இருப்போம்'' என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications