திருநாவுக்கரசு வீட்டில் சிபிசிஐடி அதிரடி ரெய்டு.. குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை
பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக திருநாவுக்கரசு வீட்டில் ரெய்டு நடத்தப்படுகிறது.
Recommended Video

கோவை: பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசு வீட்டில் சிபிசிஐடி எஸ்.பி. நிஷா தலைமையிலான போலீஸ் படை அதிரடி சோதனை நடத்தி வருகிறது. அதேபோல குடும்பத்தினரிடமும் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.
சில தினங்களாக தமிழகத்தையே உலுக்கி வருவது பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம்தான்! கடந்த 7 ஆண்டுகளாக சுமார் 400க்கும் மேற்பட்ட பெண்களை நாசம் செய்து, வீடியோ எடுத்துள்ளது 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று!
இதையடுத்து முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதியப்பட்டு, பொள்ளாச்சி போலீசார் விசாரணையும் நடத்தி வந்தனர்.

சிபிஐ
ஆனால் அந்த விசாரணையில் ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை என பொதுவான குற்றச்சாட்டு பலமாக எழுந்தது. இதனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே அது சிபிஐக்கு மாற்றப்பட்டது. எனினும், வழக்கை சிபிஐ எடுக்கும் வரை சிபிசிஐடி விசாரணை நடத்த உள்ளது.

புகார் தரலாம்
மேலும் "பொள்ளாச்சி ஆபாச வீடியோ கும்பலால் பாதிக்கப்பட்டவர்கள் சிபிசிஐடி அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்" என்று ஒரு அறிவிப்பினையும் சிபிசிஐடி போலீசார் வெளியிட்டுள்ளனர்.

சின்னியம்பாளையம்
இந்நிலையில், நேற்று சிபிசிஐடி ஐ.ஜி. ஸ்ரீதர் மற்றும் எஸ்.பி. நிஷா பார்த்திபன் ஆகியோர் பொள்ளாச்சிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது சின்னியம்பாளையத்தில் உள்ள முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு வீட்டில் இவர்களது சோதனை ஆரம்பமானது.

2-வது நாள் சோதனை
இந்நிலையில் இன்றும் சிபிசிஐடி போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர். சிபிசிஐடி எஸ்.பி. நிஷா தலைமையிலான போலீஸ் படை திருநாவுக்கரசு வீட்டில் இரண்டாவது நாளாக இச்சோதனையை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது குடும்பத்தினரிடமும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நீடித்தது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications