ஒரேயொரு நொடியில் பதறிய கோவை! தந்தை-மகன் உயிரை பறித்த தனியார் பஸ்.. டூவீலரில் மோதிய ஷாக் வீடியோ
கோவை: கோவை அருகே தனியார் பஸ், டூவீலர் மீது மோதிய விபத்தில் நகராட்சி ஊழியர் தனது 3 வயது மகனுடன் பலியானார். அவரது மனைவி மட்டும் உயிர் பிழைத்த நிலையில் விபத்து தொடர்பான அதிர்ச்சி வீடியோ வெளியாகி நெஞ்சை பதற வைத்துள்ளது.
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் நகராட்சியில் குடிநீர் பணியாளராக பணியாற்றி வந்தவர் அசோக்குமார். இவருக்கு வயது 32. திருமணமானவர். மனைவி பெயர் சுசீலா. இவருக்கு வயது 30. இந்த தம்பதிக்கு மூன்று வயதில் சர்வந்த் என்ற மகன் இருந்தான்.

இந்நிலையில் தான் கடந்த 9 ம் தேதி அசோக் குமார் தனது மனைவி, மகனுடன் பைக்கில் பெரியநாயக்கன்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். வித்யாலய மாற்றுத்திறனாளிகள் மையம் எதிரே அவர்கள் பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களுக்கு பின்னால் தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் பொள்ளாச்சியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் திடீரென கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் சென்ற பைக் மீது மோதியது. இதில் அசோக்குமார் மற்றும் அவரது மன் சர்வந்த் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
சுசீலா படுகாயமடைந்தார். இறந்த கணவர் மற்றும் மகனின் உடலை பார்த்து அவர் கதறி அழுதார். இதையடுத்து சுசீலா மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே பஸ்சின் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் பஸ்சை விட்டு விட்டு ஓடிவிட்டனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கு சாலைமறியல் செய்தனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் தான் இந்த விபத்து தொடர்பான அதிர்ச்சி வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அந்த வீடியோ என்பது பஸ்சில் இருந்த கேமராவில் பதிவானது போல் உள்ளது. அந்த வீடியோவில் இடம்பெற்றிருக்கும் காட்சி என்பது நெஞ்சை பதற வைக்கும் வகையில் உள்ளது. அதாவது பஸ்சின் முன்பு அசோக் குமார் தனது மனைவியுன் பைக்கில் சென்று கொண்டிருக்கிறார். அவர்களை பின்தொடர்ந்து பஸ் சென்று கொண்டிருக்கிறது.
இந்த வேளையில் பஸ் டிரைவர் ஹாரன் அடிக்கிறார். இதையடுத்து சாலையின் தடுப்பு சுவரையொட்டி சென்ற அசோக் குமார் பைக்கில் இடதுபுறம் நோக்கி திரும்ப நினைக்கிறார். இந்த வேளையில் பஸ் வேகமாக வந்து பைக் மீது மோதுகிறது. மோதிய வேகத்தில் பஸ் நிற்கவில்லை. சுமார் 30 அடிக்கும் அதிகமான தூரம் வரை சென்று தான் பஸ் நிற்கிறது.
இந்த சமயத்தில் விபத்தை பார்த்த பஸ்சுக்குள் இருந்த பயணிகள் கூச்சலிட்டு அபயக்குரல் எழுப்புகின்றனர். பஸ் நின்ற நிலையில் டிரைவர் மற்றும் கண்டக்டர் வேகமாக இறங்கி ஓடுகின்றனர். பஸ்சில் இருந்த பயணிகள் விபத்தில் சிக்கியவர்களை நோக்கி மீட்க முயன்றனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அசோக் குமார் மற்றும் அவரது 3 வயது மகன் இறந்துவிட்டனர். சுசீலா மட்டும் உயிருக்கு போராடிய நிலையில் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த வீடியோ தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications