Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாவ்.. கோவை மக்களுக்கு பொங்கல் பரிசு.. சிங்காநல்லூர் மேம்பாலம் குறித்து முக்கிய அப்டேட்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தொழில் வளர்ச்சி காரணமாக கோவைக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வருகை புரிகின்றனர். கோவையில் தொழில் நிறுவனங்கள் நிறைந்த பகுதியாகவும் தமிழ்நாட்டின் மத்திய மற்றும் தென் மாவட்டங்களை இணைக்கும் பகுதியாக சிங்காநல்லூர் உள்ளது. அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது கோவை மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும். கடந்த 5 வருடங்களாக அறிவிப்பு நிலையில் உள்ள சிங்காநல்லூர் மேம்பாலம் தொடர்பாக முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

கோவை மாவட்டம் கல்வி, தொழில், மருத்துவம், ஐடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டி கொண்டிருக்கிறது. இதனால் கோவை போக்குவரத்து நெரிசல் தீவிர பிரச்சனையாக மாறி வருகிறது. அவிநாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தி சாலை, பாலக்காடு சாலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

central-government-called-tender-for-singanallur-flyover

கோவை மேம்பாலங்கள்

இதனால் காந்திபுரம், உக்கடம், திருச்சி சாலை, அவிநாசி சாலை, கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன. தமிழ்நாட்டின் மிக நீளமான மேம்பாலம் (ஜிடி நாயுடு 10.10 கிமீ தொலைவு) திறக்கப்பட்டுவிட்டது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதக்காக மைல்கல் முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் வரை மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தற்போது சாய்பாபா கோவில் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதிமுக ஆட்சியில் கோவையின் பல்வேறு பகுதிகளில் மேம்பாலம் அமைக்க திட்டமிட்டிருந்தனர். சிங்காநல்லூர், சரவணம்பட்டி, லாலிரோடு, சுந்தராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலம் கட்டப்படும் என்று அறிவித்தனர். போக்குவரத்து பிரச்சனை அதிகமுள்ள சிங்காநல்லூர், சரவணம்பட்டி மேம்பால திட்டங்கள் காத்திருப்பில் உள்ளன.

சிங்காநல்லூர் மேம்பாலம் அறிவிப்பு

சிங்காநல்லூர் பகுதியில் மேம்பாலம் அமைப்பதற்கு கடந்த சில வருடங்களாக முயற்சி செய்யப்பட்டு வருகிறது. அந்தப் பகுதி தேசிய நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு ரூ.110 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டுவதற்கு கடந்த 2020 ஆம் ஆண்டில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. அதன்படி 2.4 கி.மீ தொலைவுக்கு பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் டெண்டர் ஒதுக்கப்படவில்லை.

அதிலும் கோவையில் இருந்து திருச்சி மற்றும் திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய பகுதியாக சிங்காநல்லூர் உள்ளது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் அதிகளவு உள்ளது. அங்கு மேம்பாலம் கட்ட வேண்டும் என்ற மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்படாமலேயே உள்ளது.

பணிகளில் தாமதம்

கடந்த 2020 ஆம் ஆண்டே சிங்காநால்லூரில் மேம்பாலம் அமைக்கப்படும் என அறிவித்தாலும், சுமார் 6 வருடங்களுக்கு மேலாக திட்டத்திற்காக நிதி அறிவிக்கப்படாமல் தாமதம் ஏற்பட்டு வருகிறது. சிங்காநல்லூர் தொடங்கி பாப்பம்பட்டி வரை தினசரி கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. அதனால் சிங்காநல்லூரில் மேம்பாலம் அமைக்க அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

சுமார் 6 முறை இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, டெண்டர் வரை சென்று நின்றுவிட்டன. மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் தடையின்மை சான்றிதழ் பெற வேண்டும் என்பதாலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது. அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலால் அந்தப் பகுதி மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.

வெளியான அப்டேட்

இந்நிலையில் சிங்காநல்லூர் மேம்பாலம் தொடர்பாக ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது. மத்திய சாலை போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை சிங்காநல்லூர் மேம்பாலம் டெண்டருக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளனர். ரூ.116 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 2 வருடங்களில் இதற்கான பணிகளை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளனர். சிங்காநல்லூர் உழவர் சந்தையில் தொடங்கி, ஜெய்சாந்தி தியேட்டர் அருகே முடியும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

சிங்காநல்லூர் சந்திப்பில் ஸ்டீலில் ஆர்ச் அமைக்க திட்டமிட்டிருந்தனர். அது கைவிடப்பட்டு தற்போது அங்கு 2 தூண்களை அமைக்க முடிவு செய்துள்ளனர். யூடர்ன் முறையில் வாகனங்கள் கடக்கும் வகையில் திட்டமிட்டுள்ளனர். இதனால் வரும் நாட்களில் சிங்காநல்லூர் மேம்பாலத்தின் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+