கோவைக்கு விடாமல் அடிக்கும் ஜாக்பாட்.. உள்ளே நுழைந்த சென்னை மெட்ரோ.. ரெடியாகும் மெகா ப்ராஜெக்ட்
கோவை: கோயம்புத்தூரின் உள்கட்டமைப்புக்கு ஒரு பெரிய ஊக்கம் அளிக்கும் விதமாக சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) நிர்வாகம் அங்கே பல திட்டங்களை மேற்கொள்ள உள்ளது. அதன் ஒரு கட்டமாக சத்தி சாலையில் சரவணம்பட்டி பகுதியில் மேம்பாலத்தை அமைக்க உள்ளனர்.
இந்த பாலத்தை ஏற்கனவே முன்மொழியப்பட்ட மெட்ரோ வழித்தடத்துடன் ஒருங்கிணைக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளனர். முதலில் இந்த சாலை தேசிய நெடுஞ்சாலைகள் பிரிவால் திட்டமிடப்பட்டது, திட்டம் இப்போது இரண்டு அடுக்கு வடிவமைப்பைப் பின்பற்றுகிறது . இதை தற்போது சென்னை மெட்ரோ நிர்வாகம் உருவாக்க உள்ளது. வேகமாக வளர்ந்து வரும் சரவணம்பட்டி சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவையில் 40 கிலோ மீட்டர் நீளத்திற்கு மெட்ரோ ரயில் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கோவையில் இதற்காக சாலைகளில் சர்வே எடுக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கோவையில் 5 இடங்களை மையமாக வைத்து மெட்ரோ பணிகள் நடக்க உள்ளன. அவினாசி சாலை கணியூர் வரையில்தான் முதல் கட்டமாக இந்த திட்டம் கொண்டு வரப்படும். சென்னையில் இருப்பது போலவே அதே வேகத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்படும். மெட்ரோ ரயில் திட்டம் 3 கட்டங்களாக கொண்டு வரப்பட உள்ளது. சத்தி சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரை முதல் கட்ட பணியின் இறுதியில் மெட்ரோ அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
கோவை மெட்ரோ கட்டுமானத்தில் தமிழ்நாடு அரசு சீரியஸாக இருக்கிறது. இதை மனதில் வைத்தே பணிகளை வேகமாக தொடங்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இந்த மெட்ரோ கோவையின் முக்கியமான பல பகுதிகளை இணைக்க உள்ளது. இதனால் கோவையின் மிகப்பெரிய கேம் சேஞ்சராக இந்த மெட்ரோ பாதை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவையில் மெட்ரோ லைட் திட்டத்திற்கு பதிலாக வழக்கமான மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மெட்ரோ லைட் என்றால் மெதுவாக செல்லும், குறைந்த பெட்டிகள் இருக்கும். ஆனால் கோவை மெட்ரோ சென்னை மெட்ரோ போலவே முழு மெட்ரோவாக செயல்படும்.
ரூட் என்ன?
அவினாசி சாலை, திருச்சி சாலை வழியாக மெட்ரோ பாதை. சத்தி சாலை, சிறுவாணி சாலை வழியாக மெட்ரோ பாதை. மேட்டுப்பாளையம் சாலைகள் வழியாக மெட்ரோ பாதைகளை அமைக்க முடிவு செய்துள்ளனர், மொத்தமாக 139 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
கோவை மெட்ரோ தொடக்கம்
அதன்படி CMRL ரூ.154 கோடியை ஒதுக்கி உள்ளது. ஏற்கனவே நிலம் கண்டறியப்பட்ட நிலையில் மெட்ரோ அமைக்கும் எந்திரங்கள், பேரிகேட்களை இன்று முதல் கோவைக்கு கொண்டு செல்ல. உள்ளனர் 90% நிலம் அரசுக்கு சொந்தமான நிலமாக, சாலை பகுதியாக இருப்பதால் நிலத்தை அடையாளம் காண்பதில் சிக்கல் இல்லை. அதோடு கோவையில் விரைவில் அலுவலகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கோவை மெட்ரோ முதல் கட்டத்தில் 3 மால்கள், எல்எம்யூசி உயர் தெரு, ஒரு பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் ஆகியவை இணைக்கப்பட உள்ளன. அதோடு இந்த மெட்ரோ 4 ஐந்து நட்சத்திர விடுதிகள் மற்றும் ஏராளமான கல்வி நிறுவனங்களை இணைக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது. இது நகரத்தின் போக்குவரத்தில் மிகப்பெரிய கேம்-சேஞ்சராக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
முதலில் கோவையில் மெட்ரோ லைட் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் முதல்வர் ஸ்டாலின் எடுத்த ஆலோசனையின் முடிவில் இதில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. தொழில்நகரமான கோவை நகரின் வளர்ச்சியையும், முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு மெட்ரோ லைட் திட்டத்திற்குப் பதிலாக வழக்கமான மெட்ரோ ரயில் திட்டமே செயல்படுத்தப்பட முடிவுசெய்யப்பட்டுள்ளது.
கோவை மெட்ரோ பிளான்:
கோவை மற்றும் மதுரை மெட்ரோவை தமிழக அரசு தனது பிரதான திட்டங்களில் ஒன்றாக மாற்றி உள்ளது. இதற்கான அதிக முக்கியத்துவத்தை கொடுத்து திட்டத்தை நடத்த தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. அதன்படி அடுத்த மாதமே இதற்காக நிலம் எடுக்க உள்ளனர்.
பெரும்பாலும் அரசு சாலைகள், சாலைகளுக்கு அருகே உள்ள இடங்களில்தான் நிலம் எடுக்க உள்ளனர் என்பதால்.. இந்த பணிகள் எளிதாக முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மெட்ரோவிற்கு மத்திய அரசின் நிதி வழங்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் மதுரை, கோயம்புத்தூருக்கு புதிதாக மெட்ரோ டிபிஆர் தயாரிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக மத்திய அரசிடம் அளிக்கப்பட்ட டிபிஆர் ரிப்போர்ட் பல்வேறு தவறுகள் காரணமாக நிராகரிக்கப்பட்டது. இதனால் கிடப்பில் கிடந்த திட்டம் தற்போது மீண்டும் புதிய டிபிஆர் தயாரிக்கப்பட்டு மத்திய அரசிடம் அளிக்கப்பட்டு உள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications