மாணவிகளும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பது வேதனை - கல்லூரி விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

Subscribe to Oneindia Tamil

கோவை : போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களால் மாநில வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. மாணவிகள் சிலரும் போதை பழக்கத்திற்கு அடிமையானது கவலை அளிக்கிறது என தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

கோவை, பீளமேட்டில் உள்ள பி.எஸ்.சி கல்லூரியின் பவள விழா நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசினார்.

அப்போது மாணவ மாணவிகள் மத்தியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், போதை பழக்கத்திற்கு அடிமையான இளைஞர்களை மீட்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்துள்ள, தமிழக முதல்வர் ஸ்டாலின், கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி.கலை அறிவியல் கல்லூரியின் பவள விழாவில் கலந்து கொண்டார்.

எல்லோருக்குமான நிகழ்ச்சி

எல்லோருக்குமான நிகழ்ச்சி

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "இந்த நிகழ்ச்சியை தனியார் கல்லூரி நிகழ்ச்சியாக பார்க்கவில்லை. எல்லோருக்குமான நிகழ்ச்சியாக தான் பார்க்கிறேன். மாணவச் செல்வங்களின் அறிவைக் பெருக்கும் வகையில் இந்த பி.எஸ்.ஜி கல்லூரி செயல்படுகிறது. பி.எஸ்.ஜி என்பதற்கான பொருள். P - people S - service G - good.

 முக்கியமான இடம்

முக்கியமான இடம்

கல்லூரி தரவரிசையில் மிக முக்கியமான இடத்தில் இந்தக் கல்லூரி உள்ளது. இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது இந்தக் கல்லூரி. பிளாஸ்டிக் ஒழிப்பு, சுய தொழில் வேலைவாய்ப்புக்கு வழிவகுத்தல், பல்வேறு நாட்டு நலத்திட்ட பணிகளை இந்த அரசு செவ்வனே செய்து வருகிறது. 75 ஆண்டு பவள விழாவைக் கொண்டாடும் வகையில் 75,000 பானைகளை செய்து கின்னஸ் சாதனை செய்துள்ள இந்த கல்லூரி, மண்பாண்டம் தொழில் செய்யும் தொழிலாளர்களின் வாழ்வு சிறக்கச் செய்துள்ளது.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு

கல்வியில் சிறந்த தமிழ்நாடு

இந்தியாவிலேயே உயர் கல்வியில் தமிழ்நாடு சிறப்பாக செயல்படுகிறது. கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. இந்த வளர்ச்சியைக் இந்தியாவே திரும்பி பார்க்கிறது. தலைசிறந்த கல்லூரிகளை தமிழகம் பெற்றுள்ளது. தலைசிறந்த 100 கல்லூரிகளில் 31 கல்வி நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ளன.

கல்வித்துறை

கல்வித்துறை

பள்ளிக் கல்வித் துறையாக இருந்தாலும், உயர்கல்வித்துறையாக இருந்தாலும் பல்வேறு திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. அனைவருக்கும் கல்வி, ஆரோக்கியமான கல்வியை பள்ளிக்கல்வித்துறை வழங்கி வருகிறது. போதை பழக்கத்திற்கு அடிமையான இளைஞர்களை மீட்க வேண்டும்.

 மாணவிகளும் - ஸ்டாலின் கவலை

மாணவிகளும் - ஸ்டாலின் கவலை

போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களால் மாநில வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. மாணவிகள் சிலரும் போதை பழக்கத்திற்கு அடிமையானது கவலை அளிக்கிறது. மாணவர்களுக்கு நல்ல கல்வியுடன் ஒழுக்கத்தையும் கற்றுத்தர வேண்டும். அது அனைத்து கல்வி நிறுவனங்களின் கடமை." எனப் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+